ரொம்ப சூப்பரா ஆடுறாரு. இவரோட பேட்டிங் விராட் கோலி மாதிரியே இருக்கு – இளம்வீரரை புகழ்ந்த ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிதாக இணைந்திருக்கும் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியின் ஆல்ரவுண்டர் ராகுல் திவாட்டியா இறுதி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்சர்கள் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்தது மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது.

Odean Smith PBKS vs GT

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியடையாத அணியாக குஜராத் அணியின் பயணம் தொடர்கிறது. இந்த போட்டியில் திவாட்டியா 2 சிக்சர்களை அடித்து வெற்றி பெற வைத்தது பெரிய பாராட்டுகளைப் பெற்றது. அதேவேளையில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 190 ரன்கள் என்ற இலக்கை அடைவதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் இளம் வீரரான சுப்மன் கில் இருந்தார் என்றால் அது மிகையல்ல.

ஏனெனில் முக்கியமான இந்த போட்டியில் 96 ரன்களை குவித்து அவர் அணியை இறுதிவரை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார் என்று கூறலாம். இந்நிலையில் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Shubman Gill

சுப்மன் கில் மிகவும் அழகாக பேட்டிங் செய்தார். அவர் பந்துகளை அடிக்கும் விதம் அற்புதமாக இருந்தது. பேக் புட்டில் சில ஷாட்டுகள், பிளேஸ்மெண்ட், பவர் என அனைத்தும் இந்த ஆட்டத்தில் அவருக்கு சிறப்பாக இருந்தது. என்னை பொறுத்தவரை உலகின் தலைசிறந்த இளம் வீரர்களில் இவரும் ஒருவர் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : மிகக் குறைவான அளவிலேயே டாட் பால்களை விளையாடினார். அதிகமாக ரோடேஷன் செய்தார். கில் ஒரு மிகவும் பிசியான பிளேயராக இந்த போட்டியில் இருந்தார். அதோடு இவர் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது விராட் கோலியை நினைவூட்டுகிறார்.

இதையும் படிங்க : என்னுடைய மகன் கிரிக்கெட் வீரரா மட்டும் வரவே கூடாது! ஆதங்கத்துடன் நட்சத்திர பாக் வீரர் – விவரம் இதோ

நிச்சயம் இந்த சீசனில் 600 முதல் 700 ரன்கள் இவர் அடிப்பாரா என்று கேட்டால் எளிதானதுதான் என்று கூறுவேன் என ரவிசாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த முக்கியமான போட்டியில் 59 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 96 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement