என்னுடைய மகன் கிரிக்கெட் வீரரா மட்டும் வரவே கூடாது! ஆதங்கத்துடன் நட்சத்திர பாக் வீரர் – விவரம் இதோ

pakisthan
- Advertisement -

கிரிக்கெட்டில் தனது அபார திறமையால் தங்கள் நாட்டுக்கு வெற்றியை தேடி தரும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை தங்களது ஹீரோக்களாக ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும். அதன் காரணமாக அந்த கிரிக்கெட் வீரர்கள் எந்த அளவுக்கு புகழ் பெறுகிறார்களோ அதே அளவுக்கு அவர்களின் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் புகழ் மிக்கவர்களாக மாறுகின்றனர். மேலும் அதுபோன்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள் தங்களுக்குப் பின் தங்களது மகனும் தங்களைப் போலவே தங்களது வழியில் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என விரும்புவதும் வழக்கமான ஒன்றாகும்.

- Advertisement -

கிரிக்கெட் மட்டுமல்லாது சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலுமே சாதிப்பவர்கள் ஒரு கட்டத்தில் தங்களது இடத்தில் தங்களது வாரிசுகள் வர வேண்டும் என ஆசைப்படுவார்கள். அது நியாயமான ஆசை என்றாலும் அது போன்ற தருணங்களில் அவர்களின் நட்சத்திர செல்வாக்கை பயன்படுத்தி தங்களது வாரிசுகளுக்கு வாய்ப்பை எளிதாக வாங்கி கொடுத்து விடுவார்கள்.

கிரிக்கெட்டராக வரக்கூடாது:
பெரும்பாலான தருணங்களில் அந்த நட்சத்திரங்களின் வாரிசுகள் அந்த நட்சத்திரத்தை போலவே சிறப்பாக செயல்பட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி அடையாத நேரத்தில் கண்டிப்பாக நிறைய விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதன் காரணமாகவே ஒரு சில நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாரிசுகள் கிரிக்கெட்டில் விளையாட கூடாது என கருதுவார்கள்.

Sarfraz

அந்த வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் சப்ராஸ் அகமது தனது மகன் ஒரு கிரிக்கெட்டராக மட்டும் வந்து விடக்கூடாது என தெரிவித்துள்ளார். தற்போது 34 வயது நிரம்பிய இவர் கடந்த காலங்களில் 3 வகையான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டவர். அதுவும் கடந்த 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்த அவர் பாகிஸ்தானுக்கு சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக்கொடுத்த கேப்டனாக வரலாற்றில் தனது பெயரை எழுதியுள்ளார்.

- Advertisement -

நிறைய விமர்சனம் வரும்:
இருப்பினும் அதன்பின் பேட்டிங்கில் சொதப்ப தொடங்கிய அவர் முதலில் கேப்டன் பதவியை இழந்து தற்போது விளையாடும் 11 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இருந்தும் தூக்கி எறியப்பட்டுள்ளார். அதன் காரணமாக பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் அவர் தனது மகன் அப்துல்லாஹ் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வத்துடன் இருப்பதாகவும் ஆனால் அதை தாம் தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கான காரணத்தை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அப்துல்லா கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். ஆனால் அவனை ஒரு கிரிக்கெட்டராக பார்க்க நான் விரும்பவில்லை. ஏனெனில் ஒரு கிரிக்கெடராக இருப்பவர் நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டும் என்பதால் அதை அப்துல்லா எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. மேலும் ஒரு கிரிக்கெட்டராக இருக்கும் நான் எனது மகன் அல்லது சகோதரன் கிரிக்கெட்டுக்குள் நுழையும் போது உடனடியாக நாட்டுக்காக தேர்வு செய்யப்பட வேண்டுமென நினைப்பது இயற்கையாகும்” என கூறினார்.

- Advertisement -

அதாவது கிரிக்கெட் வீரராக வந்தால் நாட்டுக்காக விளையாடுவதற்கு அவ்வளவு எளிதில் தேர்வாகி விட முடியாது எனக் கூறியுள்ள அவர் அதற்காக தாம் சந்தித்த பிரச்சனைகளையும் தடைகளையும் தனது மகன் சந்திக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கிரிக்கெட் வீரராக தனது மகன் வரும் போது தன்னைப் போல நிறைய தடைகளையும் விமர்சனங்களையும் தாங்காமல் உடனடியாக நாட்டுக்காக தேர்வாகி விட வேண்டும் என நினைப்பது இயற்கையானது என்றும் அவர் கூறினார்.

India v Pakistan

சானியா மிர்ஸா சொன்னார்:
“அப்துல்லாவுக்கு நிறைய திறமைகள் இருப்பதால் அவரை கிரிக்கெட் விளையாட விடுங்கள் என நிறைய பேர் என்னிடம் கூறினார். குறிப்பாக மொயின் கான் எனது மகனின் நுணுக்கங்களை பாராட்டினார். அத்துடன் அப்துல்லா ஒரு கிரிக்கெட் வீரராக வருவதற்கு நிறைய ஆவலுடன் இருப்பதாக ஒருமுறை சானியா மிர்சா கூறினார். ஆனால் அவன் தனது கடின உழைப்பால் சாதிக்க நான் விரும்புகிறேன். அவன் எனது மகன் என்பதற்காக யாரும் அவனுக்கு எளிதான வாய்ப்பைக் கொடுத்து விடக்கூடாது” என இது பற்றி சர்பராஸ் கான் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -

முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் மொயின் கான் மற்றும் மற்றொரு பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கை மணந்த இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் தனது மகனின் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமையையும் பார்த்து வியந்துபோய் அவரை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டதாக சர்ப்ராஸ் கான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இதுபோய் விளையாட்டா? அவரின் பெயரை சொல்லுங்க, தடை செய்யணும் – சஹாலை கொடுமை செய்தவருக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஒருவேளை தனது மகன் கிரிக்கெட்டராக வந்து கடின உழைப்பால் நாட்டுக்காக விளையாடினால் அனுமதிப்பேன் என கூறியுள்ள அவர் அதற்காக எப்போதும் தனது செல்வாக்கைப் பயன்படுத்த மாட்டேன் என்று நேர்மையாக பேசியுள்ளார்.

Advertisement