இதுபோய் விளையாட்டா? அவரின் பெயரை சொல்லுங்க, தடை செய்யணும் – சஹாலை கொடுமை செய்தவருக்கு வலுக்கும் எதிர்ப்பு

Chahal
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக மும்பை நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையில் விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 1 தோல்வியையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் டாப் இடத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. இம்முறை அந்த அணியில் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் அடுத்தடுத்து ரன்களை குவித்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டு வருகிறார்கள்.

பரிதாப சஹல்:
அதேபோல் பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட் போன்றவர்கள் வேகப்பந்து வீச்சுக்கு பலமாக இருக்க சுழல்பந்து வீச்சில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் இரட்டை குழல் துப்பாக்கியாக எதிர் அணிகளை மிரட்டும் ஜோடியாக பலம் சேர்க்கிறது. அதிலும் இந்த வருடம் இதுவரை 3 போட்டிகளில் பங்கேற்றுள்ள சஹால் 7 விக்கெட்டுகளை சாய்த்து அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் டாப் 5 இடத்தக்குள் ஜொலிக்கிறார்.

- Advertisement -

கடந்த பல வருடங்களாக விளையாடி சாம்பியன் பவுலராக உருவெடுக்க முக்கிய காரணமாக திகழ்ந்த அவரின் முன்னாள் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவுக்கு எதிரான போட்டியில் அசத்திய அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து விராட் கோலியை ரன்அவுட் செய்தது அனைவரின் பாராட்டை பெற்றது. இப்படி ராஜஸ்தானுக்காக முதல் முறையாக விளையாடும் போதிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் தனது ஐபிஎல் பயணத்தை முதல் முறையாக தொடங்கியபோது நிகழ்ந்த ஒரு மோசமான தருணத்தை பற்றி நேற்று பேசியிருந்தார்.

அதாவது இன்று கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2011 – 2012 ஆகிய ஆண்டுகளில் விளையாடினார். அப்போது அதே அணியில் விளையாடிய மற்றொரு வீரர் அதிக அளவில் மதுவை அருந்திவிட்டு தனது கை கால்களை கட்டி ஹோட்டலின் 15-வது மாடியில் தொங்க விட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யூடியூப் பக்கத்தில் சஹால் தெரிவித்தது ரசிகர்களிடைய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

- Advertisement -

பெயரை சொல்லுங்க:
அதிலும் தனது கைகளை கழுத்தின் பின்புறம் வைத்து அவர் கட்டி விட்டதால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு சிலர் தன்னை கவனித்ததால் தனது உயிர் தப்பியது என்று அவர் கூறியிருந்தார். இது பற்றி இதற்கு முன் யாரிடமும் கூறவில்லை என்றாலும் அவரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். அந்த நிலையில் அவருக்கு நிகழ்ந்த கொடுமையை அறிந்த ரசிகர்கள் என்னதான் விளையாட்டாக இருந்தாலும் எந்த அளவுக்கு மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட அவர் யாரென்றும் அவரின் பெயரை வெளியீடுமாறும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த வரிசையில் அந்த நபரின் பெயரை வெளியிடுமாறு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது.”இது சிரிப்பதற்கான ஒரு விஷயம் அல்ல. இந்த கொடுமையை அவருக்கு நிகழ்த்தியது யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவரின் மன நிலைமை நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. நிறைய பேர் இதை வேடிக்கையாக நினைக்கிறார்கள் ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒருவரின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயமாகும். இது அந்த பெயர் தெரியாத நபரின் மோசமான மன நிலையை காட்டுகிறது”

- Advertisement -

“இது போன்றதொரு தருணத்தை இப்போதுதான் நான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். இதுபோன்ற ஒரு மோசமான நிலைமை இப்போது ஏற்பட்டால் அதை செய்தவருக்கு வாழ்நாள் தடை விதித்து உடனடியாக அவரை மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் சூதாட்டத்திற்கு யாராயாவது அணுகினால் அதை உடனடியாக அந்த வீரர்கள் எப்படி மேலிடத்திற்கு தெரிவிக்கிறார்களோ அதேபோல் இது போன்ற மோசமான தருணங்களையும் மனதிற்குள் வைத்து மறைக்காமல் உடனடியாக தெரிவிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இது சிரிப்பதற்கு அல்ல என்று கூறும் ரவி சாஸ்திரி இதுபோன்ற ஒரு செயல் இப்போது நடந்து இருந்தால் அவருக்கு வாழ்நாள் தடை விதித்து மனநல காப்பகத்தில் அனுப்பி மிகப்பெரிய தண்டனையை கொடுக்க தாம் பரிந்துரை செய்திருப்பேன் என்று அந்த வீரரை விளாசினார். மேலும் இது போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலைமையை இத்தனை நாட்களாக வெளிவிடாமல் மனதிற்குள்ளேயே சுமார் 10 வருடங்கள் மறைத்து வைத்திருந்த சஹலையும் திட்டிய அவர் இதுபோன்ற மோசமான தருணங்களைக் உடனடியாக கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்க வேண்டும் என சாடினார்.

இதையும் படிங்க : தொடர் தோல்வி! 11 வருடங்கள் கழித்து பரிதாபத்துக்கு உள்ள சென்னை – எல்லாம் அவரோட சாபம் தான்

ரவி சாஸ்திரியை போல முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் போன்ற நிறைய கிரிக்கெட் நட்சத்திரங்களும் ரசிகர்களும் அந்த கிரிக்கெட் வீரரின் பெயரை வெளியிடுமாறு தொடர்ந்து சமூக வலைதளங்களில் சஹலிடம் கேட்டு வருகின்றனர்.

Advertisement