தொடர் தோல்வி! 11 வருடங்கள் கழித்து பரிதாபத்துக்கு உள்ள சென்னை – எல்லாம் அவரோட சாபம் தான்

Jadeja-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 9-ஆம் தேதி 2 போட்டிகள் ரசிகர்களை மகிழ்வித்த நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடந்த 17-ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் சந்தித்தன. டிஒய் பாட்டில் மைதானத்தில் நடந்த அந்த போட்டிக்கு முன்பாக இரு அணிகளுமே ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் புள்ளி பட்டியலில் அடிப்பகுதியில் தவித்ததால் இந்த போட்டியில் நிச்சயம் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கின. அந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 15 (11) ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் 16 (13) ரன்களில் மீண்டும் அவுட்டாகி ஏமாற்றமளித்ததால் 36/2 என தடுமாறிய சென்னை ஆரம்பத்திலேயே திண்டாடியது. அந்த இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த மொயின் அலி அம்பத்தி ராயுடு ஆகியோர் பொறுப்புடன் சென்னையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

- Advertisement -

தடுமாறி 154 ரன்கள் சேர்த்த சென்னை:
3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் அம்பத்தி ராயுடு 27 (27) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் சற்று அதிரடி காட்டிய மொய்ன் அலி 35 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடையை கட்டினார். போதாகுறைக்கு அடுத்து வந்த இளம் வீரர் சிவம் துபே 3 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்ததால் மீண்டும் 110/5 என சென்னை தடுமாறியது.

அந்த நிலையில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட நட்சத்திரம் எம்எஸ் தோனி 3 (6) ரன்களில் அவுட்டாகி சென்றார். கடைசி நேரத்தில் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட கேப்டன் ரவீந்திர ஜடேஜா 23 ரன்கள் குவித்ததால் 20 ஓவர்களில் தட்டுத் தடுமாறிய சென்னை போராடி 154/7 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்திலிருந்தே அபாரமாக செயல்பட்ட ஹைதராபாத் பவுலர்களில் அதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

11 வருடங்களுக்கு பின்:
அதை தொடர்ந்து 155 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இணைந்து ஆரம்பம் முதலே சென்னை பவுலர்களை அதிரடியாக எதிர் கொண்டனர். முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்து சென்னையின் தோல்வியை ஆரம்பத்திலேயே உறுதி செய்த இந்த ஜோடியில் 32 (40) ரன்கள் எடுத்திருந்தபோது வில்லியம்சன் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த இளம் வீரர் அபிஷேக் சர்மா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 75 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும் சென்னையின் பந்துவீச்சு மோசமாக இருந்ததை பயன்படுத்திய மற்றொரு வீரர் ராகுல் திரிப்பாதி அதிரடியாக 15 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 39* ரன்களை எடுத்து அபார பினிஷிங் கொடுத்ததால் 17.4 ஓவர்களிலேயே 155/2 ரன்களை எடுத்த ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வருடம் பங்கேற்ற முதல் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் இந்த முதல் வெற்றியால் மீண்டெழுந்தது மட்டுமல்லாமல் 8-வது இடத்தில் இருந்த சென்னையை பின்னுக்கு தள்ளி தற்போது 8-வது இடத்தை பிடித்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

- Advertisement -

ரெய்னாவின் சாபமா:
மறுபுறம் இந்த வருடம் நடப்பு சாம்பியனாக அதுவும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜா தலைமையில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே பங்கேற்ற முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வருடத்தின் ஆரம்பத்திலேயே ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தது. அந்த நிலையில் இப்போட்டியிலும் தோல்வி அடைந்த காரணத்தால் 4-வது தொடர் தோல்வியை பதிவு செய்துள்ள சென்னை தற்போது புள்ளிபட்டியலில் 9-வது இடத்துக்கு சொந்தமாகி உள்ளது.

மேலும் 4 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை 11 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக 4 போட்டிகளில் தொடர்ச்சியாக பரிதாப தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப், பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளுக்கு எதிராக அந்த அணி வரிசையாக தோல்வி அடைந்தது.

- Advertisement -

அந்த வருடம் கூட ஆரம்பத்தில் ஒருசில வெற்றிகளை பதிவு செய்த பின்புதான் இப்படி 4 போட்டிகளில் தோற்றது. ஆனால் இந்த வருடம் தான் சீசனின் முதல் 4 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்துள்ளது. மேலும் ஒரு நடப்பு சாம்பியனாக இப்படி 4 போட்டிகளில் வரிசையாக தோற்ற 2-வது அணி என்ற மோசமான பெருமையையும் மும்பைக்கு பின் (2014) சென்னை பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னை அணிக்காக ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட 2008 முதல் கடந்த வருடம் வரை தொடர்ந்து தம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சுரேஷ் ரெய்னாவை நன்றி இல்லாமல் சென்னை அணியின் நிர்வாகம் கழற்றிவிட்டது.

இதையும் படிங்க : வண்டி ஒரு சீசனில் மட்டும்தான் ஓடும்! சொதப்பும் இளம் நட்சத்திர சிஎஸ்கே வீரரை விளாசும் ரசிகர்கள்

அதனால் மனமுடைந்த அவர் தற்போது ஒரு வர்ணனையாளராக பணியாற்றும் போதும் கூட சென்னை அணிக்கு தொடர்ந்து தனது ஆதரவை தெரிவித்து வருகிறார். எனவே அவரின் சாபத்துக்கு உண்டான பலனை தான் இப்போது அனுபவிப்பதாக பல ரசிகர்கள் சென்னை அணி நிர்வாகத்தை சமூக வலைதளங்களில் சாடி வருகிறார்கள்.

Advertisement