- Advertisement -
இந்திய கிரிக்கெட்

6 ஆவது இடத்தில் இறங்கி இவரை மாதிரி விளையாட ஆள் இல்லை – இளம் வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்கிற கணக்கில் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக நாலாவது போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரவி சாஸ்திரி இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் பற்றி மனம் திறந்தார். இந்த தொடர் குறித்தும் ரிஷப் பண்டின் பேட்டிங் குறித்தும் பேசிய அவர் : இந்திய மண்ணில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்சில் 6 டவுன் இறங்கி எதிரணியை கலங்கச் செய்யும் அளவுக்கு சதமடித்த வீரர்களுள் ரிஷப் பண்ட் தான் சிறந்த வீரர் என்று சொல்லுவேன்.

அவர் ஆடிய ஆட்டம் தான் நான் கண்ட ஆட்டங்களிலேயே சிறப்பான ஆட்டம் என்றும் சொல்லுவேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். நான்காவது போட்டியில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி டாப் வீரர்களான சுமன் கில் மற்றும் விராட் கோலி , புஜாரா ஆகியோரை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் சர்மா மற்றும் ரஹானே அணியை சரிவிலிருந்து மீட்பார்கள் என்று பார்த்த வேளையில் ரஹானே அவுட்டானார்.

- Advertisement -

பின்னர் களமிறங்கிய பண்ட் ரோகித் சர்மாவுனும் வாஷிங்டன் சுந்தர் உடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து சதம் அடித்ததோடு மட்டுமல்லாமல் அணியை சரிவில் இருந்து மீட்டு எடுத்து வந்தார்.
மேலும் பேசி ரவி சாஸ்திரி , சிட்னி மற்றும் காபா டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தடுமாறும் நேரங்களில் ஆபத்பாந்தவனாக ரிஷப் பண்ட் களமிறங்கி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதையேஇங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியிலும் செய்துள்ளார்.

6 டவுன் இறங்கி இப்படி இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு சிறந்த வீரர் யார் என்று கேட்டால் அது ரிஷப் பண்ட் தான் என்று கூறினார். பண்ட் சில காலங்களாகவே உடற்பயிற்சி, பேட்டிங் பயிற்சி, கீப்பிங் பயிற்சி என அனைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவர் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டுள்ளார். பேட்டிங் சரிவர செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் தனது ஃபிட்னசை நாளுக்கு நாள் மெருகேற்றி கொண்டு வருகிறார்.

வரும் காலங்களில் ரிஷப் பண்ட் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அவர் ஒரு மேட்ச் வின்னர். அணி எந்த நிலையில் இருந்தாலும் கூலாக வந்து அணியை சரிவிலிருந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதில் அவர் கெட்டிக்காரர் என்று ரிஷப் பண்ட் பற்றி கூறி தன் பேட்டியை முடித்துக் கொண்டார்.

- Advertisement -
Published by