தோனியைப்போலவே யோசித்து செயல்படும் கேப்டன்னா அது இவர்தான் – ரவி சாஸ்திரி புகழாரம்

Shastri
- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட லீக் போட்டிகள் தற்போது அனைத்து அணிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரில் பல்வேறு வீரர்கள் தங்களது அற்புதமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி அணியும் தங்களது பிரமாதமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

DC Axar Patel Lalit Yadav

- Advertisement -

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 178 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணியானது 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததால் நிச்சயம் இந்த போட்டியில் தோல்வியடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் லலித் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டெல்லி அணி பெற்ற வெற்றியில் முக்கிய விடயமாக ரிஷப் பண்டின் கேப்டன்சி பெரிதளவு பாராட்டை பெற்றது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டினை தோனியுடன் ஒப்பிட்டு பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் :

pant

ரிஷப் பண்ட் அழுத்தத்தில் விளையாடும் வீரர் கிடையாது. அவர் எப்போதுமே அவருடைய இயல்பான ஆட்டத்தை தான் விளையாடக் கூடியவர். ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்திக் கொள்வார். தொடர்ந்து சிறப்பாக ஆடவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் அவரது சாமர்த்தியமான கேப்டன்ஷிப் எனக்கு பிடிக்கும்.

- Advertisement -

ஏனெனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் பவுலர்களை மாற்றி மாற்றி பந்துவீச வைத்த விதம் மிகவும் பிடித்திருந்தது. தோனி எவ்வாறு அதிகமாக களத்தில் சிந்தித்து செயல்படுவாரோ அதே போன்று ரிஷப் பண்டும் கேப்டன்சி செய்யும்போது பல்வேறு யோசனைகளை சிந்தித்து எடுக்கிறார்.

இதையும் படிங்க : எங்களை மட்டும் ஏன் இப்படி ஸ்பெஷலா அடிக்கிறீங்க! மும்பை ரசிகர்களை அலறவிட்ட ராஜஸ்தான் வீரர்

அவர் எடுக்கும் முடிவுகள் சரியாக அமைகிறது. பேட்டிங்கில் அவர் சற்று சொதப்பினாலும் இன்னும் சற்று கற்றுக்கொண்டு விளையாடினால் இன்னும் மென்மேலும் உயரத்திற்கு செல்வார் என்று ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement