
இந்திய அணி 1932 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. கடந்த 93 வருடங்களில் இந்திய அணிக்காக பல மகத்தான வீரர்கள் விளையாடிய நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்கள். ஆரம்பக் காலங்களில் மிகவும் தடுமாறிய இந்தியா நாளடைவில் கவாஸ்கர், சச்சின் போன்ற ஜாம்பவான்களின் வருகையால் நிறைய வெற்றிகளைக் குவிக்கத் துவங்கியது.
21ஆம் நூற்றாண்டில் நிறைய மேட்ச் வின்னர்கள் உருவானதால் தற்போது இந்தியா உலகின் டாப் அணிகளில் ஒன்றாக ஜொலித்து வருகிறது. இந்நிலையில் உங்களைப் பொறுத்த வரை இந்திய கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள் யார் என்று ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அப்போது அதிக விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ள அனில் கும்ப்ளேவை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.
அதே போல இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று போற்றப்படும் ராகுல் டிராவிட் மற்றும் ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோஹித் சர்மாவையும் ஆகியோரையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை சாஸ்திரி தேர்ந்தெடுத்துள்ளார். இது பற்றி மைக்கேல் வாகன், அலெஸ்டர் குக், டேவிட் லாய்ட் ஆகிய முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொண்ட யூடியூப் நிகழ்ச்சியில் சாஸ்திரி பேசியது பின்வருமாறு.
“கண்டிப்பாக சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் இருப்பார்கள். விராட் கோலி இந்தத் தலைமுறையில் இதுவும் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர். ஃபிஷன் சிங் பேடியும் அந்தப் பட்டியலில் இருப்பார். ஆனால் எம்எஸ் தோனி கண்டிப்பாக வருவார். இன்னும் இளமையாக இருக்கும் பும்ரா விளையாடிக் கொண்டிருக்கிறார்”
“எனவே இன்னும் விளையாட இருப்பதால் அவரை நான் சொல்ல மாட்டேன். தங்களுடைய கிரிக்கெட்டை முடித்த இந்திய வீரர்களைப் பற்றி சொல்கிறேன். அது போன்ற சூழ்நிலையில் கவாஸ்கர், கபில், சச்சின், தோனி மற்றும் விராட். அந்தப் பட்டியலில் கவாஸ்கர் முதலிடத்தை பிடிப்பார். அற்புதமான கிரிக்கெட்டரான கபில் அடுத்ததாக இருப்பார்”
இதையும் படிங்க: அவரை கழற்றி விட்டு அதே பழைய தவறை செஞ்ச.. சுப்மன் கில் மரியாதையை சம்பாரிக்கல.. ஃகைப் சாடல்
“அவர்கள் அனைவரையும் விட சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருப்பார். ஏனெனில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்த அவர் 24 வருடங்கள் விளையாடினார். உலகின் அனைத்து இடங்களிலும் விளையாடி 100 சதங்கள் அடித்துள்ள அவர் தசாப்தத்தை அட்டாக் செய்தவர். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான் ஆகியோரை எதிர்கொண்ட அவர் ஆஸ்திரேலியர்களை எதிர்கொண்டார். ப்ராட், ஆண்டர்சன் போன்ற இங்கிலாந்து பவுலர்கள், ஜேக் காலிஸ், ஷான் பொல்லாக் போன்ற தென்னாபிரிக்கா பவுலர்களையும் எதிர்கொண்ட அவர் டெக்னிக்கல் அடிப்படையில் ஞானமானவர்” என்று கூறினார்.