WTC Final : எல்லாரும் ஆஸி ஜெயிக்கும் நினைக்கலாம் ஆனா அது யாரு பக்கம் சாயுதோ அவங்க தான் வின்னர் – சாஸ்திரி அதிரடி பேட்டி

Ravi-Shastri
- Advertisement -

உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் படித்த ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்த இந்தியாவை எதிர்கொள்கிறது. பொதுவாக சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் வளர்ந்த இந்திய அணியினர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மைதானங்களில் தடுமாறுவது வழக்கமாகும். அது போக எந்த ஒரு அணியாக இருந்தாலும் அழுத்தமான நாக் அவுட் கோட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பது கடினமாகும்.

- Advertisement -

அந்த நிலையில் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து நாக் அவுட் போட்டியில் முக்கிய நேரத்தில் சொதப்பலாக செயல்பட்டு வெறும் கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ள இந்தியா கடந்த ஃபைனலில் இதே இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்துக்கு விராட் கோலி தலைமையில் சுமாராக செயல்பட்டு தோல்வியை சந்தித்தது. அத்துடன் ரிஷப் பண்ட், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் இந்த ஃபைனலில் விளையாட மாட்டார்கள் என்பதும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

சாஸ்திரி கருத்து:
மறுபுறம் ஏற்கனவே 5 உலக கோப்பைகளையும் டி20 உலக கோப்பையும் வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா நாக் அவுட் போட்டிகளில் எப்போதுமே செயல்படுவதாலேயே இவ்வளவு கோப்பைகளை வென்றுள்ளது. அதை விட கிட்டத்தட்ட தங்களது நாட்டில் இருக்கும் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் தான் இங்கிலாந்திலும் இருக்கும் என்பதால் இப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் இந்தியாவை விட ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் பொருந்தக் கூடியதாக இருக்கும். அந்த நிலையில் ஷமி, சிராஜ், உமேஷ், ஷார்துல் ஆகியோர் அடங்கிய இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியை விட பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஹேசல்வுட், கேமரூன் கிரீன் ஆகியோர் அடங்கிய ஆஸ்திரேலிய கூட்டணி தரமானதாக பார்க்கப்படுகிறது.

IND vs AUS Siraj SMith

அதனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று நிறைய கணிப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து மைதானங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருப்பதால் வெற்றி பெறும் என்று சொன்னாலும் போட்டி நாளன்று யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். அதை விட முக்கிய தருணங்களில் அதிர்ஷ்டம் யார் பக்கம் சாய்கிறதோ அவர்களே வெற்றி வாகை சூடுவார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் போட்டி போட வேண்டும். சில நேரங்களில் வெற்றி பெறுவதற்கு உங்களது வழியில் லேசான அதிர்ஷ்டமும் வரவேண்டும். எனவே நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று சொல்ல மாட்டேன். கடந்த ஃபைனலில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி தான். இருப்பினும் அதிர்ஷ்டம் எங்களது வழியில் செல்லவில்லை. அதனால் எப்போதுமே இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்வதற்கு தகுதியானது என்று நான் சொல்வேன். குறிப்பாக இந்திய அணியில் நான் இருந்த போது இதைத்தான் தொடர்ந்து சொல்லி வந்தேன்”

Shastri

“கடைசி 3 – 4 வருடங்களில் இந்திய அணி குறைந்தது ஒரு ஐசிசி கோப்பையை வெல்வதற்கு தகுதியானது என்று நினைக்கிறேன். அந்த காலகட்டங்களில் விளையாடிய வீரர்கள் இப்போதும் இருக்கின்றனர். இந்த ஃபைனலில் உங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய இங்கிலாந்து மைதானத்தில் விளையாடுவதால் ஆஸ்திரேலியா வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று அனைவரும் சொல்கிறார்கள்”

இதையும் படிங்க: WTC Final : மழை வந்தாலும் வெயில் அடிச்சாலும் ஃபைனலில் என்னோட தரமான இந்திய பிளேயிங் லெவன் இது தான் – கைஃப் பேட்டி

“ஆனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த ஒரே ஒரு போட்டியில் ஒரு மோசமான நாள் உங்களுடைய வாய்ப்புகளை மொத்தமாக உடைக்கலாம். எனவே ஆஸ்திரேலியாவும் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் மழை வந்தது பெரிய பாதகத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் சிறப்பாக விளையாடும் எந்த அணியாக இருந்தாலும் அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருந்தால் தான் வெற்றி காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement