WTC Final : மழை வந்தாலும் வெயில் அடிச்சாலும் ஃபைனலில் என்னோட தரமான இந்திய பிளேயிங் லெவன் இது தான் – கைஃப் பேட்டி

Kaif-and-Rohit-Dravid
- Advertisement -

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. அதில் முதல் முறையாக தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டு உலககோப்பை, டி20 உலகக் கோப்பை வரிசையில் இந்த கோப்பையையும் முதல் முயற்சியிலேயே வெல்வதற்கு தயாராகி வருகிறது.

IND-vs-AUS

- Advertisement -

மறுபுறம் கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது. பொதுவாக சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் விளையாடப் பழகிய இந்திய அணியினர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் தடுமாறுவது வழக்கமாகும். எனவே நன்றாக பயிற்சி எடுத்து தயாராவதும் சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்வதுமே அங்கு வெற்றி பெறுவதற்கான முதல் படியாகும்.

கைஃப் லெவன்:
அந்த நிலையில் இம்முறை ரிசப் பண்ட், கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அது போக இங்கிலாந்து மண்ணில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 ஸ்பின்னருடன் களமிறங்கினால் தான் வெற்றிக்கு போராடி முடியும். அந்த சூழ்நிலையில் இப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் கடந்த ஃபைனலில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த அஸ்வின் – ஜடேஜா தேர்வு மீண்டும் நிகழுமா என்ற கவலையும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஃபைனல் நடைபெறும் ஓவல் மைதானத்தில் போட்டி நாளன்று நிலவும் வானிலைக்கு ஏற்ப 4வது பவுலராக அஸ்வின் அல்லது சர்துல் தாக்கூர் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் அதிரடியாக விளையாடும் திறமையை கொண்ட ரிசப் பண்ட் இல்லாத சூழ்நிலையில் கேஎஸ் பரத்துக்கு பதிலாக இடது கை பேட்ஸ்மேனாகவும் சற்று அதிரடியாக விளையாடும் தன்மையை கொண்ட இசான் கிசான் விக்கெட் கீப்பராக விளையாட சரியானவராக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த ஃபைனலில் களமிறங்கும் தன்னுடைய இந்திய 11 பேர் அணியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தேர்வு செய்து பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரைத் தொடர்ந்து 3வது இடத்தில் அனுபவிக்க புஜாரா விளையாடுவார். அதே போல 4வது இடத்தில் விராட் கோலியும் 5வது இடத்தில் கம்பேக் கொடுத்துள்ள அஜின்கய ரகானே இருப்பார்கள். மேலும் நான் கேஎஸ் பரத்துக்கு பதிலாக இசான் கிசானை தேர்வு செய்வேன்”

Kaif

ஏனெனில் 6வது இடத்தில் அதிரடியாக விளையாடக் கூடிய ஒருவர் உங்களுக்கு தேவை. குறிப்பாக பழைய பந்தில் ரிசப் பண்ட் போன்றவர் உங்களுக்கு தேவை. 7வது இடத்தில் ஜடேஜா 8வது இடத்தில் கால சூழ்நிலைகளைப் பொறுத்து நான் அஸ்வின் அல்லது ஷார்துல் தாக்கூரை தேர்வு செய்வேன். குறிப்பாக பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தால் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், கவாஜா போன்ற இடது கை பேட்ஸ்மேன்களை தாக்குவதற்காக அஸ்வின் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க:IPL 2024 : ஒருவேளை தோனி ஆடலானா சி.எஸ்.கே கண்டிப்பா அவரைத்தான் ட்ரேட் செய்யும் – அவரே அடுத்த சி.எஸ்.கே தல

“அதே போல வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாட தகுதியானவர்கள். தற்போது ஜூன் மாதத்தின் ஆரம்பம் என்பதால் நீங்கள் 3 வேகம் மற்றும் அஸ்வின், ஜடேஜா அல்லது சார்துலை வானிலைக்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement