- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அது இல்லன்னு தெரிஞ்சா விராட், ரோஹித் ரிட்டையராகி போய்டுவாங்க.. யாரும் சொல்லாதீங்க.. ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடிய அவர் கடந்த இங்கிலாந்து தொடரில் கம்பேக் கொடுக்கத் தயாராகினர்.

அதற்காக பல வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாரான அவர்களை தேர்வுக்குழு கழற்றி விட தயாரானது. அதற்கு முன்பாக அவர்களாகவே அடுத்தடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வை அறிவித்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இனிமேல் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இந்தியாவுக்கு விளையாடப் போகிறார்கள்.

- Advertisement -

யாரும் சொல்ல வேண்டாம்:

குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபி செமி ஃபைனலில் விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா இந்தியா கோப்பையை பட்டம் வெல்ல உதவினார். அப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் மேட்ச் வின்னர்களாக திகழும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறார்கள்.

ஆனால் அப்போது 38, 40 வயதில் அவர்களால் அசத்த முடியுமா என்று கருதும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட முடிவெடுத்துள்ளது. அதற்காக அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை என்று கருதினால் தாங்களாகவே ஓய்வு பெற்ற சென்று விடுவார்கள் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தாங்களாகவே போய்ட்டுவாங்க:

எனவே ஓய்வு பெறுங்கள் என்று யாரும் அவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் சாஸ்திரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சேஸ் மாஸ்டர். ரோஹித் சர்மா ஓப்பனிங்கில் வெளுத்து வாங்கக்கூடியவர். அவர்கள் இப்போதும் தங்களிடம் போதுமானளவு திறமை இருப்பதாக கருதுகின்றனர். உலகக் கோப்பையில் விளையாடுவது உங்களுடைய பசி, ஃபிட்னெஸ், விளையாட்டின் மீதான ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்”

இதையும் படிங்க: அதுவரை நீங்க தோற்க மாட்டீங்க.. 2027 உ.கோ முன் கழற்றி விட நினைக்கும் பிசிசிஐக்கு விராட் கோலி மெசேஜ்?

“தங்களிடம் இருக்கும் அனுபவத்திற்கு அவர்களுக்கு அவையெல்லாம் எளிதாக வரும். உலகக் கோப்பைக்கு நீண்ட தூரம் இருப்பதால் ஒரு சமயத்தில் ஒரு தொடரை அட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு நான் சொல்வேன். விராட், ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அவர்களை யாரும் ஓய்வு பெறுமாறு சொல்லவில்லை. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஃபார்மின்றி மகிழ்ச்சியின்றி விளையாடுவதாக நினைத்தால் அவர்கள் தங்களுக்கு தாங்களே விடை பெறுவார்கள்” என்று கூறினார்.

- Advertisement -