முதலில் இது இந்திய அணி கிடையாது.. அதை புரிஞ்சுக்கோங்க.. பாண்டியா விமர்சனங்கள் பற்றி ரவி சாஸ்திரி

Ravi Shastri 2
- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசனில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ள அந்த அணி பிளே ஆஃப் செல்வதற்கு அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

ஆனால் 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றியை மறந்து ரோஹித் சர்மாவை கழற்றி விட்டதால் அதிருப்தியடைந்த மும்பை ரசிகர்கள் ஆரம்பம் முதலே பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் முதல் போட்டியிலேயே ரோஹித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு அருகே சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தியது ரசிகர்களை மேலும் கோபமடைய வைத்தது.

- Advertisement -

இந்திய அணி அல்ல:
அதனால் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தங்களுடைய சொந்த கேப்டன் என்றும் பாராமல் மும்பை ரசிகர்களே பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது “லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன். பாண்டியா மும்பை கேப்டன். மரியாதை கொடுங்கள்” என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அதை ஏற்காத ரசிகர்கள் தொடர்ந்து போட்டி முழுவதும் பாண்டியாவுக்கு எதிராகவே இருந்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் என்பது இந்திய அணி கிடையாது என்பதால் பாண்டியாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லை என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் இது இந்திய அணி கிடையாது. இது ஐபிஎல். இங்கே பல டாலர்களை முதலீடு செய்தவர்கள் தான் உரிமையாளர்கள். அந்த சூழ்நிலையில் யார் கேப்டனாக செயல்பட வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம்”

- Advertisement -

“இருப்பினும் இந்த முடிவு எடுக்கப்பட்டதில் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒருவேளை நீங்கள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு பாண்டியாவை அடுத்த 3 வருடங்களில் அணியின் நலனுக்காக கேப்டனாக்க விரும்பினால் அதை சற்று இவ்வளவு எதிர்ப்புகள் வருவதற்கு முன்பாக தெரிவித்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: கோலிக்கு எதிரா அந்த சின்னப்பையன் எப்படி பவுலிங் பண்ணப்போறாருன்னு பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் – ஸ்டூவர்ட் பிராட்

“ஏனெனில் இது எங்களுக்கு ரோகித் சர்மா வேண்டாம் அல்லது அவர் மோசமாக நடத்தப்படுகிறார் என்பதை பொறுத்தது அல்ல. சோசியல் மீடியாவை பற்றி உங்களுக்கு தெரியும். அங்கே எல்லா வகையான விஷயங்களும் வெளியே வரும். அங்கே நிறைய காளைகள் உள்ளன. அங்கே சில கதைகள் விதைக்கப்படுகின்றன. சில நேரங்களில் அது மற்றவர்களின் பெயர்களிலும் பதிக்கப்படுகிறது. எனவே அதை தவிர்ப்பதே பேரின்பமாகும்” என்று கூறினார்.

Advertisement