- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுக்கு மேல பும்ராவுக்கு ரெஸ்ட் வேணுமா? இந்தியாவை விட அது முக்கியமா? கம்பீர், கில்லை விளாசிய சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டது.

அதை விட நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுத்து 3வது போட்டியில் விளையாடுவார் என்று கேப்டன் சுப்மன் கில் அறிவித்தது இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவாக பார்க்கப்படுகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் உலகின் நம்பர் ஒன் பெஸ்ட் பவுலராக ஜொலிக்கும் அவர் கடந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆனால் அவரைத் தவிர்த்து மற்ற பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்தாதது தோல்வியைக் கொடுத்தது.

- Advertisement -

ஒரு வார ரெஸ்ட் போதாதா:

இருப்பினும் 5 போட்டிகளில் விளையாடினால் காயத்தை சந்திக்க வாய்ப்புள்ளது, எனவே பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஆரம்பத்திலேயே பயிற்சயாளர் கௌதம் கம்பீர் அறிவித்தார். அதன் படி இந்தப் போட்டியில் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் ஜூன் 24ஆம் தேதி நிறைவுற்ற முதல் போட்டிக்கு பின் 7 நாட்கள் ஓய்வு இருந்ததாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

அதையும் தாண்டி பும்ரவுக்கு ஓய்வு வேண்டுமா? என்று அவர் கம்பீர், கில்லை விளாசியுள்ளார். ஏற்கனவே இந்தியா பின்தங்கியிருக்கும் நிலையில் இப்போட்டியில் பும்ராவின் ஓய்வு தான் முக்கியமா? என்று தெரிவிக்கும் சாஸ்திரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “உங்களிடம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருக்கிறார்”

- Advertisement -

சாஸ்திரி விளாசல்:

“7 நாட்கள் ஓய்வு எடுத்த பின்பும் அவரை நீங்கள் உட்கார வைத்துள்ளீர்கள் என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. இந்த முடிவு கண்டிப்பாக தலைமைப் பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் குழுவின் கைகளில் இருக்கக்கூடியது. சொல்லப்போனால் அது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கையில் இருக்கும் முடிவாகும். ஒரு வாரம் இடைவெளிக்கு பின் விளையாட வரும் இந்தியாவுக்கு இது மிகவும் முக்கியமான போட்டி”

இதையும் படிங்க: குல்தீப் யாதவை சேர்க்காமல் வாஷிங்க்டன் சுந்தரை சேர்த்தது ஏன்? விளக்கம் கொடுத்த – சுப்மன் கில்

“இது இந்தியா நிச்சயம் வென்றாக வேண்டிய போட்டி. ஒருவேளை நீங்கள் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள விரும்பினால் இந்தப் போட்டியில் உங்களுடைய முதன்மை பவுலர் கண்டிப்பாக விளையாட வேண்டும். அதை விட்டுவிட்டு அப்படி நடக்கலாம், இப்படி நடக்கலாம் என்று சொல்லாதீர்கள்” எனக் கூறினார். ஒருவேளை அவர் கூறுவது போல இப்போட்டியில் இந்தியா தோற்று விட்டால் அதன் பின் பும்ரா வந்தாலும் கம்பேக் கொடுப்பது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -