- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ராவின் வித்யாசம் 48 செ.மீ.. 2019லயே ராபர்ட்ஸ், கர்ட்லி ஆம்ப்ரோஸிடம் பாரட்டை வாங்குனாரு.. சாஸ்திரி பேட்டி

ஐசிசி 2024 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பையில் மொத்த உலகம் திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்தியா இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினாலும் 15 விக்கெட்டுகள் எடுத்து தொடர்நாயகன் விருது வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக இறுதிப் போட்டியில் கடைசி 30 பந்துகளில் தென்னாபிரிக்காவுக்கு 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா வெல்லுமா என்பது சந்தேகமாக காணப்பட்டது. ஆனால் அப்போது 16, 18வது ஓவரை வீசி வெறும் 6 ரன்கள் கொடுத்த அவர் வெற்றியை மீண்டும் இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார்.

- Advertisement -

ரவி சாஸ்திரி பாராட்டு:
அதனால் ஜஸ்ப்ரித் பும்ரா உலகில் சிறந்த பவுலராக திகழ்வதாக வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் 2019 டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த போது ஜாம்பவான்கள் ஆண்டி ராபர்ட்ஸ் மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆகியோர் கொடுத்த பாரட்டை விட பும்ராவுக்கு வேறு பெரிய பாராட்டு கிடைக்காது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மேலும் பும்ராவின் பவுலிங் எப்படி தனித்துவமாக இருக்கிறது என்பதை பற்றியும் விளக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு உச்சகட்ட பாராட்டு 2019இல் வந்தது. நான் பயிற்சியாளராக இருந்த போது டெஸ்ட் தொடரில் விளையாடினோம். அத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பும்ரா 2 போட்டிகளிலும் இரண்டரை நாட்களில் தோற்கடித்தார்”

- Advertisement -

“அப்போது ஆண்ட்டி ராபர்ட்ஸ் மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து பும்ராவிடம் சென்று “இளம் பையனே, நீ எங்களுடைய காலத்தில் புதிய பந்தை எடுத்திருப்பாய்” என்று சொல்லி பாராட்டினார்கள். மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர், ஆண்டி பைஃக்ரோப்ட், மைக்கேல் ஹோல்ட்டிங் ஆகியோருக்கு தலைவரான ராபர்ட்ஸ் அவ்வாறு சொன்னதை விட பும்ராவுக்கு ஒரு சிறந்த பாராட்டு கிடைத்திருக்க முடியாது”

இதையும் படிங்க: இந்தியாவின் 2007 விட 2024 டி20 உ.கோ ரொம்ப ஸ்பெஷல்.. காரணம் இது தான்.. கேப்டன் ரோஹித் பேட்டி

“முகமது சிராஜை விட ஜஸ்ப்ரித் பும்ரா 48 சென்டிமீட்டர் கீழே அதுவும் நேரான மணிக்கட்டை வைத்து பந்தை ரிலீஸ் செய்கிறார். நீங்கள் பந்தை முன்னோக்கி விடும் போது அது பவுன்ஸராகும். பின்னோக்கி விடும் போது பிட்ச்சாகும். அங்கிருந்து உங்களால் யார்கர், பவுன்சர், ஹார்ட் லென்த் ஆகியவற்றை வீசலாம். அதை செய்வதாலேயே பும்ரா மற்றவர்களை விட தனித்துவமாக இருக்கிறார். அது 140 கி.மீ வேகத்தில் இருந்தாலும் பந்தை அதிகமாக அடிக்கும்” என்று கூறினார்.

- Advertisement -