இந்தியாவின் 2007 விட 2024 டி20 உ.கோ ரொம்ப ஸ்பெஷல்.. காரணம் இது தான்.. கேப்டன் ரோஹித் பேட்டி

Rohit Sharma 2007
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஜூலை நான்காம் தேதி மும்பையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற்ற அந்தத் தொடரில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்ற இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தனர்.

அந்த மகிழ்ச்சியால் ஜூலை நான்காம் தேதி நாடு திரும்பிய இந்திய அணிக்கு விமான நிலையத்திலிருந்தே ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்து பிரதமரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற இந்திய அணியினர் மாலை 5 மணிக்கு மும்பை கடற்கரை சாலையில் திறந்த வெளி பேருந்தில் வந்தனர். குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற போது முதல் முறையாக தோனி தலைமையிலான இந்திய அணியினர் திறந்தவெளி பேருந்தில் வந்து வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடினர்.

- Advertisement -

2007 விட சிறந்தது:
அதே போல 17 வருடங்கள் கழித்து மும்பையின் கடற்கரை சாலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வந்தனர். அவர்களுக்கு கடற்கரை சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று சேர்ந்து வெறித்தனமான வரவேற்பு கொடுத்தனர். அவர்களுடன் சேர்ந்து இந்திய அணியினர் வெற்றியை கொண்டாடினார்கள்.

அப்போது ஒரு வீரராக 2007இல் வென்றதை விட இந்தியாவின் கேப்டனாக வென்ற 2024 டி20 உலகக் கோப்பையே தமக்கு மிகவும் ஸ்பெஷலானது என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். இது பற்றி பேருந்தில் பயணித்த வாக்கில் அவர் பேசியது பின்வருமாறு. “2007 வித்தியாசமான உணர்வு. அந்த பயணத்தை நாங்கள் மதிய நேரத்தில் துவங்கினோம். இந்த பயணத்தை மாலை நேரத்தில் துவங்கினோம். 2007 வெற்றியை மறக்க முடியாது”

- Advertisement -

“ஏனெனில் அது என்னுடைய முதல் உலகக் கோப்பை. ஆனால் இது கொஞ்சம் அதிகம் ஸ்பெஷல். ஏனெனில் இம்முறை நான் நமது அணியை பெருமையுடன் வழி நடத்தினேன். இந்த வெற்றி எங்களுக்கு மட்டுமல்ல மொத்த நாட்டுக்கும் எவ்வளவு பெரிது என்பதை ரசிகர்கள் காண்பிக்கின்றனர். எனவே ரசிகர்களுக்காகவும் இதை சாதித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஹாஸ்பிடல் அப்றம் போய்க்கலாம்.. சொன்னதை செஞ்சுட்டான்.. ரோஹித்தை முத்த மழையால் நனைத்த அம்மா நெகிழ்ச்சி

அதை தொடர்ந்து இந்திய அணியினர் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றனர். அங்கு பிசிசிஐ சார்பில் அவர்களுக்கு சிறப்பு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் 125 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இறுதியாக வான்கடே மைதானத்தை சுற்றி வந்து வந்தே மாதரம் பாடலை பாடிய இந்திய அணியினர் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement