ஆஸ்திரேலியாவை சாய்க்க 10 மாசத்துக்கு முன்னாடியே மாஸ்டர்பிளான்.. ஜெய் ஷா, பிசிசிஐ’யை பாராட்டிய ரவி சாஸ்திரி

Ravi Shastri 4
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தங்களுடைய 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடப்போகும் வீரர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கும் அந்த பட்டியலில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 4 வீரர்கள் அதிகபட்சமாக 7 கோடியை சம்பளமாக பெறும் ஏ ப்ளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின், ஷமி, சிராஜ், கில் போன்ற முக்கிய வீரர்கள் 5 கோடிகளை சம்பளமாக பெறும் ஏ பிரிவிலும் சூரியகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் போன்ற வளர்ந்து வரும் வீரர்கள் 3 கோடிகளை சம்பளமாக பெறும் பி பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் 1 கோடியை சம்பளமாக பெறும் சி பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

ரவி சாஸ்திரி பாராட்டு:
அதை விட வரலாற்றிலேயே முதல் முறையாக தற்போது வேகப்பந்து வீச்சுக்கு என்று தனியாக ஒரு ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்து வீச்சின் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்தும் எண்ணத்துடன் தேர்வு குழுவின் பரிந்துரைப்படி இந்த ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய அசத்திய ஆகாஷ் தீப், 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய உம்ரான் மாலிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் யாஸ் தயாள், விஜய்குமார் விய்ஷக், வித்வாத் காவேரப்பா ஆகிய உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தும் 3 இளம் வீரர்களும் இந்த வேகப்பந்து வீச்சு ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. எனவே வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்காக இப்போதே தரமான வேகப்பந்து வீச்சாளர்களை வளர்க்கும் நோக்கத்துடன் பிசிசிஐ இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாத்திரி பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: லிஸ்ட்ல உம்ரான் மாலிக் இருக்கும் இந்த திட்டம் புதுசா இருக்கே.. பிசிசிஐ’யை பாராட்டிய இயன் பிஷப்

இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “ஆட்டத்தை மாற்றும் வேகப்பந்து வீச்சு ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியதற்காக ஜெய் ஷா மற்றும் பிசிசிஐக்கு பெரிய கைதட்டல்கள். இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் தொடருக்கு தயாராவதில் இது ஒரு முக்கிய படி. இது டெஸ்ட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சக்தி வாய்ந்த செய்தியாகும். மேலும் இது நமது அன்பான விளையாட்டின் எதிர்காலத்திற்கு சரியான பாதையை அமைக்கிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement