ரவி சாஸ்திரியின் புதிய சம்பளம் வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட அதிகமா ? – கிழிக்கும் நெட்டிசன்கள்

Ravi
- Advertisement -

ரவிசாஸ்திரி அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த பிறகு அவருக்கு பதிலாக இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இரண்டாவது முறையாக ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவரோடு பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் என அனைவரும் மீண்டும் பொறுப்பை தொடங்கினர்.

Ravi

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கிடையில் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிசாஸ்திரி சம்பள உயர்வு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதன்முறையாக இந்திய அணிக்கு ரவிசாஸ்திரி பதவி ஏற்கும்போது ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

அதன் பிறகு தற்போது அவருக்கு 20 சதவீதம் சம்பளம் உயர்த்தப்பட்டு 9.5 கோடி முதல் 10 கோடி ஆண்டு வருமானமாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிகிறது. ரவி சாஸ்திரியின் இந்த புதிய சம்பளம் கோலி, ரோஹித் மற்றும் பும்ராவை விட அதிகம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? ஆனால் இந்த விடயம் உண்மைதான்.

ravi

இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு A கிரேட் சம்பளம் வழங்கப்படும். அந்த சம்பளத்தின் அதிகபட்ச தொகையை 7 கோடி தான். தற்போதைய இந்திய அணியில் ரோகித் சர்மா, கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் கிரேட் A பிரிவில் ஏழு கோடி சம்பளம் ஆண்டிற்கு வருமானமாக பெற்று வருகின்றனர்.

Ravi-shastri

மீதம் உள்ள வீரர்கள் அவரவர்களின் கிரேட் ஏற்ப சம்பளத்தை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வீரர்களை விட ரவி சாஸ்திரி அதிகமாக சம்பளம் வாங்கும் விடயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரவி சாஸ்திரியை கலாய்த்து வருகின்றனர். வீரர்களாவது அணிக்காக விளையாடுகிறார்கள் ரவிசாஸ்திரி என்ன செய்கிறார் ஊர் ஊராக சுற்றிக் கொண்டு பார்ட்டியில் ஈடுபட்டு வருகிறார் என்று இணையத்தில் ரவி சாஸ்திரி வருத்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement