IPL 2023 : இந்நேரம் பழைய டீம் இருந்தா அவர் மாஸ் கட்டிருப்பாரு – நட்சத்திர கேப்டனின் தடுமாற்றத்தை விளக்கும் சாஸ்திரி

Ravi-Shastri
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் விளையாடுவதால் கடந்த காலங்களை விட தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு மும்மடங்கு போட்டி நிலவுகிறது. அந்த நிலைமையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் மும்பை இந்தியன்ஸ் கடந்த வருடம் புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தைப் பிடித்து பின்னடைவுக்கு உள்ளானது. முன்னதாக 2008இல் சச்சின் தலைமையில் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த மும்பைக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா 2013 – 2020 வரையிலான காலகட்டத்தில் அபாரமாக செயல்பட்டு 5 கோப்பைகளை வென்று தோனியை மிஞ்சி சாதனை படைத்தார்.

MI Jaspirt Bumrah

இருப்பினும் அந்த காலம் கட்டங்களில் வெற்றி நடை போடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த பாண்டியா சகோதரர்கள், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரை 2022 மெகா ஏலத்தில் மொத்த அணிகளும் கலைக்கப்பட்ட போது தக்க வைக்க தவறிய மும்பைக்கு பொல்லார்ட், மலிங்கா ஆகியோரும் வயது காரணமாக ஓய்வு பெற்றனர். அந்த நிலைமையில் அந்த சாம்பியன் வீரர்கள் இல்லாததால் 2022இல் தடுமாறிய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா கேரியரில் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டது 6 தொடர் தோல்விகளையும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தையும் பரிசாக கொடுத்தது.

- Advertisement -

பழைய டீம் இருந்திருந்தா:
அதனால் அந்த சாம்பியன் வீரர்களும் தரமான அணியும் கிடைத்திருந்தால் விராட் கோலி கூட பெங்களூருவுக்கு கோப்பையை வென்று கொடுத்திருப்பார் என்று அந்த அணி ரசிகர்கள் தெரிவித்தனர். அந்த நிலையில் இந்த சீசனில் அதிலிருந்து மீண்டெழுந்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வரும் மும்பை முதல் 10 போட்டிகளில் 5 வெற்றிகள் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறது. அதை விட கேப்டனாக முன்னின்று அதிரடியாக விளையாடி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய ரோஹித் சர்மா 10இல் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 9 போட்டிகளில் சொதப்பினார்.

Rohit Sharma

அதிலும் கடைசி 2 போட்டியில் அடுத்தடுத்த டக் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையும் படைத்தார். அப்படி கேப்டனாக ரோகித் சர்மா தடுமாறுவதே இதர வீரர்களிடம் குறைவான உத்வேகத்தை ஏற்படுத்தி மும்பை தடுமாறுவதற்கு முதல் காரணமென்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். அதை விட பேட்டிங்கில் தடுமாறும் ரோகித் சர்மா தலைமையில் 2019 வாக்கில் இருந்த வீரர்கள் இப்போது இருந்திருந்தால் கூட மும்பை சிறப்பாக செயல்பட்டிருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எப்போதுமே அதிரடியாக விளையாடி ஒரு தொடரை நீங்கள் சிறப்பாக துவக்கினால் கேப்டனாக செயல்படுவது மிகவும் எளிதாகிவிடும். மாறாக ரன்கள் எடுக்க தடுமாறும் போது பாடி லாங்குவேஜ் மற்றும் களத்தில் இருக்கும் எனர்ஜி போன்றவை முற்றிலுமாக குறைந்து விடும். அது போன்ற சமயங்களில் நீங்கள் ஜாம்பவானாக இருந்தாலும் இந்த நிலைமையை சந்தித்தாக வேண்டும். அந்த வகையில் தான் கேப்டனாக உங்களுடைய செயல்பாடுகள் அணியின் வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்”

MI - Ravi Shastri

“இருப்பினும் தற்போது தன்னுடைய கேரியரில் இந்த இடத்தில் இருக்கும் அவருக்கு கிடைத்துள்ள இந்த அணியை வைத்துக்கொண்டு சாதிப்பது சற்று கடினமாகும். ஒருவேளை ஓரிரு வருடத்திற்கு முன்பிருந்த அணி இப்போது இருந்திருந்தால் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். ஆனால் அதே போன்ற அணியை தற்போது கலவையாக உருவாக்குவதே அதே கேப்டனின் வேலையாக்கும். ஏனெனில் ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்த அணி தற்போதில்லை”

இதையும் படிங்க:WTC Final : கப் நம்மகில்ல, ரகானே மாதிரி அவர ஏன் எடுக்கல – சம்மந்தமில்லாத இஷான் கிசான் தேர்வை விளாசும் ரசிகர்கள்

“அதனால் தற்போது கேப்டனாக ரோஹித்துக்கு சவால் இரு மடங்காகியுள்ளது. இருப்பினும் 2 வருடத்திற்கு முன்பாக சிறப்பான அணி இருந்ததால் அவர்களுடன் களமிறங்கி அவரால் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது” என்று கூறினார். அதாவது என்ன தான் 5 கோப்பைகளை வென்ற அனுபவம் இருந்தாலும் தரமான வீரர்கள் இல்லாமல் ரோஹித் சர்மா தடுமாறுவதாக ரவி சாஸ்திரி கூறுகிறார்.

Advertisement