WTC Final : கப் நம்மகில்ல, ரகானே மாதிரி அவர ஏன் எடுக்கல – சம்மந்தமில்லாத இஷான் கிசான் தேர்வை விளாசும் ரசிகர்கள்

Ishan-Kishan
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7 – 11 முதல் வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. குறிப்பாக கடந்த முறை நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் தவறி விட்ட கோப்பையை இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது வென்று 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் தலைக்கு முற்றுப்புள்ளி வைக்க போராட காத்திருக்கும் இந்தியாவுக்காக விளையாடும் 15 பேர் கொண்ட அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் ஜஸ்பிரித் பும்ரா ஏற்கனவே காயத்தால் வெளியேறியது பின்னடைவாக அமைந்த நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் தோனியை மிஞ்சி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் இல்லாதது மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அறிமுகமாகி விக்கெட் கீப்பிங் செய்வதில் தடுமாறி பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்ட கேஎஸ் பரத்துக்கு பதிலாக இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் 2 முறை சதமடித்த அனுபவத்தைக் கொண்ட கேஎல் ராகுல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டைப் போலவே இந்த ஃபைனலிலும் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும் என ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:
அதற்கான வாய்ப்புகளும் அதிகரித்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட ராகுல் காயமடைந்து வெளியேறினார். அந்த நிலையில் அவருக்கு பதிலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இசான் கிசான் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. ஏனெனில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத அவர் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்ததை தவிர்த்து சமீப காலங்களில் பெரும்பாலும் இந்திய மைதானங்களிலேயே திண்டாட்டமாக செயல்பட்டு 2023 ஐபிஎல் தொடரிலும் மும்பை அணிக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை.

அப்படிப்பட்ட அவர் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் பட் கமின்ஸ், ஹேசல்வுட் போன்ற தரமான ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு எதிராக நிச்சயமாக திணறுவார் என்பதால் ரசிகர்கள் விளாசுகின்றனர். அதை விட இதே ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அட்டகாசமாக விளையாடி வரும் மூத்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா கடந்த வருடம் கழற்றி விடப்பட்டாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அபாரமாக செயல்பட்டு வருகிறார். சொல்லப்போனால் ரிசப் பண்ட்டை விட அதிகப்படியான அனுபவத்தை கொண்ட சஹா இங்கிலாந்து மண்ணில் தற்போதுள்ள ஃபார்முக்கு நிச்சயமாக அசத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

குறிப்பாக கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் சமீபத்திய ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அட்டகாசமாக செயல்பட்ட ரகானே தேர்ந்தெடுக்கப்பட்டது போல ராகுல் வெளியேறியதும் சகா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பண்ட், ராகுல் என 2 அனுபவமிக்க வீரர்களை அதிக அனுபவமிக்க சகா ஃபைனலில் சிறந்த விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு கச்சிதமாக பொருந்தக் கூடியவராக இருந்தும் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

இதையும்  படிங்க:IPL 2023 : இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரா? நண்பனாக தம்மிடம் தோனி சொன்னதை ரசிகர்களுக்கு கூறிய ரெய்னா

சரி 38 வயதைத் தொட்ட அவருக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினால் கேஎஸ் பரத்தை விக்கெட் கீப்பராக வைத்து கடந்து சில வருடங்களாகவே ரஞ்சிக் கோப்பையில் முரட்டுத்தனமாக செயல்பட்டு வரும் என்பதே மற்றொரு தரப்பு ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. ஆனால் அதை இரண்டையும் செய்யாத தேர்வுக்குழு சம்பந்தமின்றி தேர்வு செய்துள்ள இசான் கிசான் நேரடியாக இங்கிலாந்து மண்ணில் அறிமுகமாகி நிச்சயமாக சதமடிக்கப் போவதில்லை என்று தெரிவிக்கும் ரசிகர்கள் இதனால் இம்முறையும் இந்தியா கோப்பையை வெல்லப்போவதில்லை என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement