நள்ளிரவு 2 மணிக்கு பந்துவீச சொன்னால் கூட கபில் தேவ் மாதிரி ஷமியால் அந்த பந்தை வீசமுடியும் – ரவிசாஸ்திரி

Shami
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக முகமது ஷமியின் பந்துவீச்சு இருந்தது.

shami 2

- Advertisement -

அந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டனும், அதிரடி துவக்க வீரருமான கே.எல் ராகுல் விக்கெட்டை முதல் பந்திலேயே வீழ்த்திய அவர் அதன் பின்னர் துவக்கவீரர் டிகாக் மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோரது விக்கெட்டையும் கைப்பற்றினர். இப்படி ஆரம்பத்திலேயே லக்னோ சரிவுக்கு கொண்டு சென்றதால் அந்த போட்டியில் குஜராத் அணி அவர்களை எளிதில் சுருட்டி அபாரமாக வெற்றி பெற்றது.

மேலும் அந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் முகமது ஷமி தேர்வானார். இந்நிலையில் முகமது ஷமியை கபில் தேவ்வுடன் ஒப்பிட்டு பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி கூறுகையில் :

Shami 1

முகமது ஷமி தற்போது சிறப்பான உடல் தகுதியுடன் உள்ளார். அதிவேகத்தில் பந்து வீசும் அவர் தன்னுடைய பேலன்சை எப்போதும் இழப்பதில்லை. அதோடு மிகவும் துல்லியமாக பந்துவீசும் அவரது கையிலிருந்து ஸ்விங் எளிதாக வருகிறது. முன்னாள் கேப்டனான கபில் தேவை நீங்கள் 2:00 மணிக்கு எழுப்பி பந்துவீச சொன்னால்கூட அவுட் ஸ்விங் சிறப்பாக வீசுவார்.

- Advertisement -

அதேபோன்று முகமது ஷமியும் எப்போது பந்துவீச சொன்னாலும் அவுட்ஸ்விங் பந்து வீசுவதில் வல்லவர். இத்தகைய திறனுடையவர்கள் சிலர் மட்டும்தான் அந்த வகையில் முகமது ஷமியும் அபாரமான திறமை கொண்டவர். அவரின் கையில் இருந்து சீம் வெளியிடும் விதம் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டினார்.

இதையும் படிங்க : மும்பை அணியை வீழ்த்திய அஷ்வின் மற்றும் சாஹலின் மாயாஜாலம் – மும்பை தோக்க என்ன காரணம்?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : முகமது ஷமி போலவே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனும் அருமையாக அவுட்ஸ்விங் வீசுவார். மும்பை மைதானம் அவரது பந்து வீச்சுக்கு அதிகளவு கைகொடுக்கும் என்பதினால் ஷமி இனிவரும் போட்டிகளிலும் பவர் பிளேயில் அதிக விக்கட்டுகளை வீழ்த்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாக ரவிசாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement