மும்பை அணியை வீழ்த்திய அஷ்வின் மற்றும் சாஹலின் மாயாஜாலம் – மும்பை தோக்க என்ன காரணம்?

Ashwin
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டி டி ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே முதல் போட்டியில் டெல்லி அணியிடம் அடைந்த தோல்வி காரணமாக இந்தப் போட்டியில் மும்பை அணி சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வீழ்த்தும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் 23 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டுமொருமுறை ராஜஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவி இந்த தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை தழுவியுள்ளது.

MI-vs-RR

- Advertisement -

அதேவேளையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை செய்து இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது பட்லர், சாம்சன் மற்றும் ஹெட்மையர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது துவக்கத்திலேயே ரோகித் சர்மா மற்றும் அன்மொல்பிரீட் சிங் ஆகியோரது விக்கெட்டை இழந்தாலும் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

chahal

ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் ஆடிய விதத்தை பார்க்கும் போது மும்பை அணி எளிதில் வெற்றி பெறும் என்று தோன்றியது. ஆனால் அந்த நேரத்தில் இஷான் கிசன் 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஒருபுறம் திலக் வர்மா ராஜஸ்தான் அணிக்கு கடும் அச்சுறுத்தலை தந்தார். கிட்டத்தட்ட 15-வது ஓவர் வரை 3 விக்கெட்டுகளை மட்டுமே மும்பை அணி இழந்து இருந்ததால் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்த நேரத்தில் தான் தமிழக வீரர் அஷ்வின் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம் திலக் வர்மாவின் விக்கெட்டை க்ளீன் போல்ட் முறையில் வீழ்த்தினார். அதுவே இந்த போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம். ஏனெனில் திலக் வர்மா 33 பந்துகளில் 61 ரன்கள் விளாசி இருந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே யுஸ்வேந்திர சாஹல் அதிரடி வீரர்களான டிம் டேவிட் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தினார்.

இதையும் படிங்க : தோனியைப்போலவே யோசித்து செயல்படும் கேப்டன்னா அது இவர்தான் – ரவி சாஸ்திரி புகழாரம்

இதன்காரணமாக இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது அஸ்வின் மற்றும் சாஹல் ஆகியோர் வீழ்த்திய அந்த 3 விக்கெட்டுகள் தான் என்றால் அது மிகையல்ல.

Advertisement