IPL 2023 : களத்தில் எப்டி நடந்துக்கணும்னு சச்சின், தோனியிடம் கத்துக்கோங்க – நட்சத்திர வீரருக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்

Shastri-1
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் கடந்த சீசனை விட இந்த வருடம் ஆரம்பம் முதலே பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்டு முதல் 10 போட்டிகளில் 419* ரன்களை குவித்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

ஆனால் சாதாரணமாகவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் ஒரு விக்கெட் விழுந்தால் கூட வெறித்தனமாக கொண்டாடக்கூடிய அவர் இந்த சீசனில் சில சர்ச்சையான நிகழ்வுகளில் ஈடுபட்டார். முதலில் டெல்லிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெவிலியனில் அமர்ந்திருந்த முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியை முறைத்த அவர் போட்டியின் முடிவில் ஜென்டில்மேனாக கை கொடுத்துக் கொள்ளவில்லை.

- Advertisement -

சாஸ்திரி அட்வைஸ்:
ஏனெனில் 2017 முதல் 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக இருந்தும் உலகக் கோப்பை வென்று கொடுக்காத காரணத்தால் சந்தித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க டி20 கேப்டன்ஷிப் பதவியை மட்டும் ராஜினாமா செய்த அவரின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை பிசிசிஐ பறிப்பதற்கு கங்குலி முக்கிய காரணமாக இருந்தார். அது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் நவீன்-உல்-ஹக் உடன் மோதிய விராட் கோலியிடம் தனது அணி வீரரை எப்படி சீண்டலாம் என்ற வகையில் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வம்படியாக சண்டையில் ஈடுபட்டார்.

Virat Kohli Gambhir.jpeg

அது மெகா சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் டெல்லிக்கு எதிராக மீண்டும் நடைபெற்ற போட்டியில் பேசவில்லை என்றாலும் முடிவில் கங்குலியிடம் அவர் கை கொடுத்தது ஓரளவு அமைதியை ஏற்படுத்தியது. அது போக சென்னைக்கு எதிரான போட்டியில் சிவம் துபே விக்கெட்டை சம்பந்தமின்றி முரட்டுத்தனமாக கொண்டாடியதால் கடுப்பான நடுவர் அபராதம் விதித்தார்.

- Advertisement -

மொத்தத்தில் ஆரம்ப காலங்களில் இளம் வீரராக சில வாக்குவாதங்களில் ஈடுபட்டாலும் தற்போது 34 வயதைத் தொட்டு ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு வளர்ந்தும் விராட் கோலி இப்படி ஆக்ரோஷமாக நடந்து கொள்வதும் சண்டையில் ஈடுபடுவதும் பொதுவான ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்நிலையில் உடைமாற்றம் அறையை தவிர்த்து எஞ்சிய அனைத்து நேரங்களிலும் உன்னிப்பாக கண்காணிக்கும் கேமராக்களை கொண்ட இந்த நவீன கிரிக்கெட்டில் எப்படி ஜென்டில்மேனாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை தோனி, சச்சின் போன்றவர்களிடம் விராட் கோலி கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

shastri

குறிப்பாக தோனி, சச்சின் ஆகியோர் கோபப்பட்டாலும் கேமரா முன்பாக அதை கட்டுப்படுத்தி ஜென்டில்மேனாக நடந்து கொள்வதை விராட் கோலி பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஸ்டார் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் சிலர் விராட் கோலியை விரும்பலாம் சிலர் தோனியை விரும்பலாம். அதில் தோனி தாம் தொழில் ரீதியாக எப்படி நடக்க வேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர்”

- Advertisement -

” இந்த விளையாட்டில் நாட்டுக்காகவும் அணிக்காகவும் நிறைய பங்காற்றியுள்ள உங்கள் மீது எப்போதும் கேமரா இருப்பதற்கு நீங்கள் தகுதியானவர்கள். அது சச்சின் டெண்டுல்கர் இருந்தாலும் அங்கே அவர் மீது கேமரா இருந்து கொண்டே இருக்கும். அத்துடன் போட்டி முடிந்தாலும் நீங்கள் உடை மாற்றும் அறைக்கு செல்லும் வரை உங்களை கேமரா தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்”

Shastri

இதையும் படிங்க:IPL 2023 : உங்க தகுதிக்கும் ஃபார்முக்கும் இதெல்லாம் கம்மி, இந்நேரம் 500 ரன்கள் அடிச்சுருக்கணும் – இளம் இந்திய வீரர் மீது சேவாக் அதிருப்தி

“எனவே அது போன்ற சமயங்களில் நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக போட்டி நடக்கும் வரை கேமரா நம்மை சுற்றி இருக்கிறது என்ற மனதுடன் நீங்கள் இருக்க வேண்டும். அதன் பின்பு தான் சூழ்நிலைகள் நீங்கள் விரும்பும் வகையில் இருக்கும். அந்த கேமராவை பயன்படுத்தி உங்களுடைய மறைமுகமான புள்ளிகள் வெளியே வரலாம்” என்று கூறினார்.

Advertisement