IPL 2023 : உங்க தகுதிக்கும் ஃபார்முக்கும் இதெல்லாம் கம்மி, இந்நேரம் 500 ரன்கள் அடிச்சுருக்கணும் – இளம் இந்திய வீரர் மீது சேவாக் அதிருப்தி

virender sehwag
- Advertisement -

இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு பெறும் இடமாக கருதப்படும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் ஒருவராக அசத்தி வருகிறார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 8 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து 90% பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்வதற்கு பேட்டிங் துறையில் முக்கிய பங்காற்றி வரும் அவர் 11 போட்டிகளில் 469* ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி பட்டியலில் 3வது இடத்தில் போட்டி போட்டு வருகிறார்.

Gill

- Advertisement -

கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பத்தில் காயம் மற்றும் சுமாரான செயல்பாடுகளால் வெளியேறிய அவர் 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் மறக்க முடியாத காபா வெற்றியில் 95 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். மேலும் கடந்த 2022 சீசனில் 483 ரன்களை குவித்து முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்து ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற தொடர்களில் அடுத்தடுத்த தொடர்நாயகன் விருதுகள் வென்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

திறமைக்கு கம்மி:
அதே வேகத்தில் சமீபத்திய வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களின் சதமடித்த அவர் பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்தார். அதன் வாயிலாக ஒரே காலண்டர் வருடத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற சாதனை படைத்த அவர் தொடர்ந்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வருவதால் சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தம்மிடம் உள்ள திறமைக்கும் தற்போதுள்ள ஃபார்முக்கும் சுப்மன் கில் இந்நேரம் 500 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் சேவாக் அடுத்து வரும் போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு இந்த சீசனில் 600 – 700 ரன்கள் எடுப்பார் என்று நம்புவதாக கூறியுள்ளார். குறிப்பாக லக்னோவுக்கு எதிராக 94* ரன்கள் குவித்து கடைசி ஓவர் வரை விளையாடியும் சதமடிக்காத அவர் தன்னுடைய எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த செயல்பாடுகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். குறிப்பாக முதல் 10 போட்டிகளில் 375 ரன்கள் எடுத்த அவர் இந்த சீசன் முடிவில் குறைந்தது 550 ரன்களை எடுப்பார் என்று நம்புகிறேன். ஆனாலும் இந்தியாவுக்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி பெரிய ரன்களை எடுக்கும் அவர் தன்னுடைய ஃபார்மை இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்த சீசன் முடிவில் அவர் 600 – 700 ரன்களை எடுத்திருப்பார். ஒருவேளை நான் சுப்மன் கில்லாக இருந்தால் நிச்சயமாக இந்த செயல்பாடுகளால் மகிழ்ச்சியடைய மாட்டேன்”

Sehwag

“ஏனெனில் நல்ல பார்மில் இருந்தும் நான் 375 ரன்கள் மட்டுமே அடித்துள்ளேன். மேலும் தற்போதைய நிலைமையிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி பெரிய முன்னேற்றம் இல்லை. கடந்த வருடத்தை விட அவருடைய ரன்கள் சற்று முன்னேறியிருந்தாலும் பெரிய மாற்றத்தை சந்திக்கவில்லை. இத்தனைக்கும் அவர் ஷாட்களை நல்ல நேர்மறையான சிந்தனையுடன் அடிக்கிறார்”

இதையும் படிங்க:வெளிய தான் கோபம் ஆனா மொத்த மனசும் தங்கம் – இந்திய வீரரின் அம்மா சிகிச்சைக்கு கம்பீர் மாபெரும் உதவி, பாராட்டும் ரசிகர்கள்

“எப்படி இருந்தாலும் அவருடைய ரன்கள் பெரிய அளவில் அதிகமாகவில்லை. இந்த சீசனில் இன்னும் 4 போட்டிகள் இருப்பதால் இந்தியாவுக்கு விளையாடியதை போலவே அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். குறிப்பாக அவரிடமிருந்து நான் சதத்தை எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

Advertisement