வயசான விராட், ரோஹித்தை டி20 அணியில் கழற்றி விட்டு இளம் ரத்தத்தை பாய்ச்சும் நேரம் வந்தாச்சு – முன்னாள் வீரர் அதிரடி

rohith
- Advertisement -

இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வருங்கால வீரர்களை கண்டறிந்து கொடுக்கும் நோக்கத்தில் கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரால் கடந்த 15 வருடங்களில் பும்ரா, ஹர்டிக் பாண்டியா உள்ளிட்ட ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கிடைத்தனர். அதன் பயனாக ஒரே சமயத்தில் 2 அணியை களமிறக்கும் அளவுக்கு அபரித வளர்ச்சியை கண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐபிஎல் 2023 தொடரிலும் நிறைய இளம் வீரர்கள் கிடைத்துள்ளனர். அதில் ராஜஸ்தான் அணிக்காக அசத்தலாக செயல்பட்டு வரும் யசஸ்வி ஜெய்ஸ்வால் 575 ரன்களை குவித்து அனைவரது பாராட்டுகளை பெற்றுள்ளார்.

Jaiswal and Rohit

- Advertisement -

பானி பூரி விற்பவரின் மகனாகப் பிறந்து ஏற்கனவே 2022 அண்டர்-19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்து சென்ற பெருமைக்குரிய அவர் சமீப காலங்களாகவே உள்ளூர் தொடரில் அபாரமாக செயல்பட்ட நிலையில் இந்த சீசனில் வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியில் 124 (62) ரன்கள் குவித்து அதிவேக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்து மிரட்டி வருகிறார். அதே போல் கொல்கத்தா அணியில் குஜராத்துக்கு எதிராக கடைசி 5 ஓவரில் 5 சிக்சர்களை பறக்க விட்டு வரலாறு காணாத வெற்றியை பெற்றுக் கொடுத்த ரிங்கு சிங் சமீபத்தில் சென்னையை அதன் சொந்த ஊரில் தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

வயதான சீனியர்கள்:
அது மட்டுமல்லாமல் பஞ்சாப் அணியில் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா, மும்பை அணியில் அசத்தும் திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் இந்தியாவுக்கு விளையாடும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டு வருகின்றனர். மறுபுறம் இந்திய கிரிக்கெட்டின் தூண்களாகவும் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் கருதப்படும் ரோகித் சர்மா இந்த தொடரில் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்து வரும் நிலையில் விராட் கோலியும் முக்கிய போட்டிகளில் மெதுவாக விளையாடி பின்னடைவை கொடுத்து வருகிறார்.

Kohli

அத்துடன் 2022 டி20 உலக கோப்பையில் பெரும்பாலான சீனியர்களால் இந்தியா தோல்வியையே சந்தித்தது. இந்நிலையில் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் போல விராட் மற்றும் ரோகித்தை டி20 கிரிக்கெட்டில் கழற்றி விட்டு இளம் ரத்தங்களை பாய்ச்சும் நேரம் வந்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோரது அனுபவத்தை டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பயன்படுத்தி இந்திய கிரிக்கெட்டை புதிய பாதையில் பயணிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஏற்கனவே தங்களை நிரூபித்தவர்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அனைவரும் அறிவோம். அந்த நிலையில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வைத்து விட்டு ஐபிஎல் தொடரில் அசத்தும் இளம் வீரர்களுக்கு டி20 அணிக்கு வாய்ப்பு கொடுத்து வளர்க்கும் பாதையை தான் நான் தேர்ந்தெடுப்பேன். மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ள சீனியர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நகர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போன்ற தொடர்களில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்”

shastri 1

“அப்படி செய்தால் அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாடி பணிச்சுமை பிரச்சனையும் ஏற்படாது. எனவே அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 தொடரில் இந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். தேர்வு குழுவினர் இப்போதே அந்த இளம் ரத்தத்தை பாய்ச்சத் துவங்க வேண்டும். அதற்கு ஒரு வருடம் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் பின்பு மறையலாம். தற்போதுள்ள இளம் வீரர்களை சரியாக தேர்வு செய்து வாய்ப்பு கொடுங்கள். அனுபவம் மற்றும் ஃபிட்னஸ் தாமாக வரும்”

இதையும் படிங்க:GT vs SRH : கோப்பைய பாண்டியா பேர்ல எழுதுங்க, 2022 போலவே மாஸ் காட்டும் குஜராத் – முடிந்தது ஹைதராபாத் கனவு

“அத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடும் அதே இடத்தில் தான் இந்தியாவுக்காகவும் அவர்கள் விளையாட வேண்டும். குறிப்பாக ஐபிஎல் தொடரில் 3, 4 ஆகிய இடங்களில் விளையாடியவர்களை இந்தியாவுக்காக 6, 7 போன்ற இடங்களில் பயன்படுத்தக் கூடாது. அதே போல இடது வலது கை பேட்ஸ்மேன்கள் கலவையாக இருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். அந்த இளம் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் 6வது பவுலராகவும் குஜராத் அணியை போலவே இந்தியாவுக்காகவும் அசத்துவார்” என்று கூறினார்.

Advertisement