நாங்க 2 ஆசிய கோப்பை ஜெயிச்சதை எல்லாரும் மறந்துட்டாங்க, நீங்களாச்சும் அதை செய்ங்க – டிராவிட்டுக்கு சாஸ்திரி அட்வைஸ்

shastri
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராபி வென்றது. அவருக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் 2017, 2019, 2021 ஆகிய வருடங்களில் நடைபெற்ற 3 விதமான உலகக் கோப்பைகளிலும் பெரும்பாலான தொடர்களில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெறுங்கையுடன் வெளியேறியது. அப்படி உலக கோப்பையை வெல்லவில்லை என்ற ஒரே காரணத்தாலேயே இரு தரப்பு தொடர்களிலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தும் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி படிப்படியாக தனது கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்தார்.

dravid 1

- Advertisement -

கூடவே அவருக்கு உறுதுணையாக இருந்து வந்த ரவி சாஸ்திரியும் பயிற்சியாளர் பதிவிலிருந்து விலகியதை தொடர்ந்து புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மாவுக்கு உதவியாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர்களது தலைமையில் வழக்கம் போல லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐசிசி டி20 மற்றும் ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா முன்னேறியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

எல்லாரும் மறந்துடுவாங்க:
ஆனால் துபாயில் 6 அணிகள் பங்கேற்ற 2022 ஆசிய கோப்பையிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. இதனால் புதிதாக பொறுப்பேற்ற ரோஹித் – ராகுல் கூட்டணி தலைமையிலும் இந்திய அணி எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு ஒருபுறம் வருத்தமாகவே இருந்து வருகிறது.

shastri

இந்நிலையில் தமது காலகட்டத்தில் 2 ஆசிய கோப்பைகளை வென்றும் அதை யாருமே நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கும் ரவி சாஸ்திரி நீங்களாவது முக்கிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ராகுல் டிராவிட்டுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியிலும், அண்டர்-19 மற்றும் இந்தியா ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்து தற்போது சீனியர் அணியில் பயிற்சியாக இருக்கும் ராகுல் டிராவிட் தம்மை விட அடிப்படையிலிருந்து அனைத்தையும் புரிந்து கொண்டவர் என்பதால் உலகக் கோப்பையை நிச்சயம் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது சில நேரங்களை எடுத்துக் கொள்ளும். எனக்கு சில நேரங்கள் தேவைப்பட்டது போல் அவருக்கும் சில நேரங்கள் தேவைப்படலாம். ஆனால் என்சிஏவில் பணியாற்றி இந்தியா ஏ அணிக்கும் பயிற்சியாளராக இருந்த ராகுல் சீனியர் அணியில் பயிற்சியாளராக இருப்பது சாதகமாகும். ஏனெனில் அவர் அடிப்படையில் இருக்கும் வீரர்கள் மற்றும் சிஸ்டத்தில் நிறைய அனுபவத்தை கொண்டுள்ளார். அதனால் அவருக்கு தேவையான நேரத்தை கொடுங்கள். இருப்பினும் நமது மக்களின் நினைவுகள் மிகவும் சிறியது. நீங்கள் வெல்ல வேண்டுமெனில் நிச்சயம் வெல்ல வேண்டும்”

Shastri

“என்னுடைய தலைமையில் இந்தியா 2 ஆசிய கோப்பைகளை வென்றும் அதை யாருமே நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. எங்களைப் பற்றி பேசும் போது யாராவது அந்த 2 ஆசிய கோப்பையை பற்றி பேசுகிறார்களா? இல்லை யாரும் பேசுவதில்லை. ஆனால் நாங்கள் ஆசிய கோப்பையில் தோற்றது போது மட்டும் பெரிய விமர்சனங்கள் எழுந்தன. எனவே அனைவரும் வெற்றி பெற விரும்புகிறார்கள் ஆனால் அதற்கு நீங்கள் எப்படி முன்னோக்கி கால் வைத்து நடக்கிறீர்கள் என்பது முக்கியம்”

இதையும் படிங்க:நாங்க இப்போவும் நண்பனா ஜென்டில்மேனா தான் இருக்கோம், நீங்க தான் ஒதுக்குறீங்க – அடம் பிடிக்கும் இந்தியாவுக்கு அஃப்ரிடி கோரிக்கை

“சில நேரங்களில் நீங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடவில்லை என்றாலும் வெற்றி பெறுவீர்கள். ஆனால் அதே வகையில் நீங்கள் உலகக் கோப்பை வெல்வதற்கு மிகவும் அதிர்ஷ்டம் வேண்டும். உலகில் சில அணிகள் மட்டுமே அன்றைய நாளின் சிறப்பாக விளையாடாமல் இருந்தும் உலக கோப்பை வென்றுள்ளன. ஆனால் அது அரிதாகும்” என்று கூறினார்.

Advertisement