நாங்க இப்போவும் நண்பனா ஜென்டில்மேனா தான் இருக்கோம், நீங்க தான் ஒதுக்குறீங்க – அடம் பிடிக்கும் இந்தியாவுக்கு அஃப்ரிடி கோரிக்கை

- Advertisement -

ஆசிய கண்டத்தின் டாப் 2 கிரிக்கெட் அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு காலத்தில் நட்பாக இருந்தாலும் நாளடைவில் எல்லை பிரச்சனை காரணமாக இருதரப்பு தொடர்களின் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் இந்திய அரசின் அனுமதியின்றி எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Jay Shah IND vs PAk

- Advertisement -

ஆனால் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் நீங்கள் தங்களிடம் கேட்காமல் இப்படி அறிவித்தது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்கள் நாட்டில் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அறிவித்துள்ளது. அதனால் கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் பற்றி இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து பல எதிரும் புதிருமான கருத்துக்களும் மோதல்களும் நிலவி வருகின்றன.

இருப்பினும் ஆசிய கவுன்சிலுக்கும் ஐசிசிக்கும் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் இந்தியாவின் ஜெய் ஷா ஆசிய கவுன்சில் தலைவராக இருப்பதால் இந்த விவாகரத்தில் அவர் எடுக்கும் முடிவே இறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்போதைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உணர்வுபூர்வமான முடிவுகளை எடுக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஷாஹித் அப்ரிடி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Afridi

ஒதுக்காதீங்க இந்தியா:
இந்நிலையில் ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதற்கு தயாராக இருப்பதாக சாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். குறிப்பாக 2005 பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் ஷாப்பிங் செய்த போது பாகிஸ்தான் கடைக்காரர்கள் நட்புடன் பணம் வாங்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இப்போதும் நாங்கள் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் வந்து பங்கேற்க ஜென்டில்மேனாக தயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இந்தியாவிலிருந்து தான் சிலர் பாகிஸ்தான் இந்தியாவுக்கு வரக்கூடாது என்று அச்சுறுத்தலை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆசிய கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்று யார் சொல்கிறார்கள்? இந்தியா தான் அப்படி சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள். நாங்கள் அவர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதற்கு முன் மும்பையிலிருந்து ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத இந்தியர் பாகிஸ்தானை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று அச்சுறுத்தலை கொடுத்தார். ஆனால் நாங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு எங்களுடைய அரசு அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டதால் இந்தியாவுக்கு சென்று விளையாடினோம். எனவே எந்த அச்சுறுத்தல்களும் நம்முடைய இருநாட்டு உறவை பாதிக்க கூடாது”

Afridi

“ஏனெனில் அச்சுறுத்தல்கள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். அதனால் இந்தியா எங்கள் நாட்டுக்கு வந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அது இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடுவதற்கான முதல் படியாகவும் இருக்கும். ஏனெனில் தற்போதைய தலைமுறையில் நாம் போர் மற்றும் சண்டைகளில் ஈடுபடவில்லை என்பதால் நம்முடைய உறவுகள் இன்னும் சிறப்பாக இருப்பதை விரும்புகிறேன். நாங்கள் வரலாற்றில் நிறைய முறை நிறைய அன்பு மற்றும் ஈர்ப்புடன் இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ளோம்”

இதையும் படிங்க:IND vs AUS : 3வது ஒன்டே நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“குறிப்பாக இந்தியாவுக்கு ஒருமுறை நாங்கள் சென்ற போது அங்கே எங்களுக்கு கொடுக்கப்பட்ட அபரிதமான வரவேற்பு இன்னும் எனது நினைவில் இருக்கிறது. அதே போல் 2005இல் எங்கள் நாட்டுக்கு இந்திய அணி வந்த போது யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டு ஷாப்பிங் செய்தனர். ஆனால் அப்போது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கிரிக்கெட் மற்றும் இந்தியர்களின் மீதிருக்கும் நட்பால் பணம் வாங்கவில்லை. இது தான் நமது 2 நாட்டுக்கும் இடையே இருக்கும் அழகான நட்பாகும்” என்று கூறினார்.

Advertisement