
இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி அதனுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஜூலை 27ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. அதனால் இந்திய அணியில் எம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பை உட்பட சமீப காலங்களில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்தார். அதனால் ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவர் ஃபிட்டாக இல்லையென்று சொல்லி சூரியகுமாரை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.
முன்னாள் பயிற்சியாளரின் அட்வைஸ்:
குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கும் திறமையை கொண்டுள்ள சூரியகுமார் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். எனவே அவரை 2026 டி20 உலகக் கோப்பைக்கு கேப்டனாக வளர்க்க கௌதம் கம்பீர் தீர்மானித்துள்ளார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்படும் சூரியகுமார் கேப்டனாக தகுதியானவர் என்று ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
அதே போல பவுலர்களின் பலம் பலவீனங்களை அறிந்து அதற்கு தகுந்தார் போல் ஃபீல்டிங்கை செட்டிங் செய்யும் யுக்தியை சூரியகுமார் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தன்னுடைய அணியில் உள்ள பவுலர்களின் பலம், வரம்பு என்ன என்பதை சூரியகுமார் கற்றுக்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும். பவுலர்களுக்கு பலவீனம் இருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன்”
“ஆனால் அவர்களிடம் உச்சகட்ட வரம்பு மற்றும் பலம் இருக்கும். எனவே சூரியகுமார் அதில் கவனம் செலுத்தி அதற்கு தகுந்தாற்போல் ஃபீல்டிங்கை செட்டிங் செய்ய வேண்டும். அதைத்தான் அவர் கேப்டனாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மிகவும் புத்திசாலித்தனமான சூரியகுமார் சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரராக திகழ்வதை நாம் அறிவோம்”
இதையும் படிங்க: 1983 டூ 2024 வரை அவங்க காரணமில்ல.. கெளதம் கம்பீர் பற்றிய நினைப்பை நிறுத்துங்க.. மஞ்ரேக்கர் அதிருப்தி
“இந்த ஃபார்மெட்டில் அவர் தனது சொந்த வழியைப் பின்பற்றினாலும் அது மோசமான ஐடியாவாக இருக்காது. பேட்டிங்கில் விளையாடுவதைப் போலவே அவருடைய கேப்டன்ஷிப் இருக்கும் என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் தற்போதுள்ள அணியில் இருக்கும் அனைத்து வீரர்களை பற்றியும் அவர் நன்றாக அறிவார். எனவே அதற்கு தகுந்தார் போல் வேகமாக சிந்தித்து அவரால் செயல்பட முடியும்” என்று கூறினார்.