- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தப்பா போட்டதும் சரியா வேலை செஞ்சுது.. இலங்கையை 2வது போட்டியில் வீழ்த்திய.. ஆட்டநாயகன் பிஸ்னோய் பேட்டி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 2வது போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜூலை 28ஆம் தேதி பல்லகேல் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 161/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 53, பதும் நிசாங்கா 32 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து இந்தியா சேசிங் செய்ய துவங்கிய போது மழை வந்ததால் 8 ஓவரில் 78 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது. அதை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 30, கேப்டன் சூரியகுமார் 26, ஹர்டிக் பாண்டியா 22* ரன்கள் அடித்து 6.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் பிஸ்னோய்:
அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே வென்றுள்ள இந்தியா சூரியகுமார் – கெளதம் கம்பீர் தலைமையில் தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்நிலையில் கொஞ்சம் வேகமாக பந்து வீசுவது தமக்கு உதவுவதாக பிஸ்னோய் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தவறான லைனில் பந்து வீசுவது தமக்கு வேலை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இன்று பிட்ச் வித்தியாசமாக இருந்தது. நேற்று முதல் இன்னிங்ஸில் அது சுழலுக்கு சாதகமாக இல்லை. ஆனால் இன்று அது சுழன்றது. என்னுடைய வேகம் எனக்கு நல்லது. நான் வேகத்துடன் பந்து வீச விரும்புகிறேன்”

- Advertisement -

“சில நேரங்களில் தவறான பந்துகளை வீசுவதை நான் விரும்புகிறேன். அதை வீசி எனக்கு என்ன வேலை செய்கிறதா என்பதை பார்க்க முயற்சிக்கிறேன். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அது வேலை செய்கிறது. டெத் ஓவர்களில் என்னால் பந்து வீச முடியும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது. அந்த பொறுப்பை நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நடப்பு 2024-ஆம் ஆண்டில் முதல் இந்திய வீரராக அசத்தலான சாதனையை நிகழ்த்திய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் கடைசி போட்டி ஜூலை 30ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த போட்டியிலும் வென்று ஒய்ட் வாஷ் வெற்றியுடன் இத்தொடரை வெல்ல இந்திய அணி தயாராகி வருகிறது. மறுபுறம் சொந்த மண்ணில் தொடரை இழந்த இலங்கை ஒயிட் வாஸ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

- Advertisement -