தோனி முடிச்சுடுவாருன்னு தெரிஞ்சும்.. ரிஷப் பண்ட் அந்த திட்டத்தை மிஸ் பண்ணாரு.. நானும் பேசல.. பிஸ்னோய் பேட்டி

Ravi Bishnoi
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி லக்னோவில் 30வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னைக்கு துவக்க வீரர்கள் ரச்சின் 37, சாய்க் ரசீத் 27 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள்.

ஆனால் மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்னில் விக்கெட்டை இழந்து பின்னடைவைக் கொடுத்தனர். அதனால் தடுமாறிய சென்னைக்கு சிவம் துவே நிதானமாகவும் தோனி அதிரடியாகவும் விளையாடி வெற்றிக்குப் போராடினர். மறுபுறம் ஏற்கனவே 3 ஓவரில் வெறும் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த ரவி பிஸ்னோய் நல்ல ஃபார்மில் இருந்தார்.

- Advertisement -

ரிஷப் தவறு:

அதனால் 19வது ஓவரை அவருக்கு லக்னோ ரிஷப் பண்ட் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்யாத அவர் சர்துள் தாக்கூருக்கு 19ஆவது ஓவரை கொடுத்தார். அதைப் பயன்படுத்திய தோனி, துபே 19 ரன்கள் அடித்து வெற்றியை எளிதாக்கினர். இறுதியில் தோனி 26*, துபே 43* ரன்கள் அடித்து 19.3 ஓவரில் சென்னையை வெற்றி பெற வைத்தனர்.

அதனால் சென்னை 5 தொடர் தோல்விகளை நிறுத்தி 2வது வெற்றியைப் பெற்ற நிலையில் லக்னோ 3வது தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் டெத் ஓவரில் ரவி பிஸ்னோய்க்கு ஒரு ஓவரைக் கூட ரிஷப் பண்ட் கொடுக்காதது லக்னோ தோல்விக்கு முக்கிய காரணமானதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அதைப்பற்றி ரிஷப் பண்ட்டிடம் தாம் பேசவில்லை என்று பிஸ்னோய் கூறியுள்ளார்.

- Advertisement -

பிஸ்னோய் கருத்து:

தோனி வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்வது விடுவார் என்று தெரிந்தும் ரிஷப் பண்ட் தாக்கூரை பயன்படுத்தியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது பற்றி ரிஷப்பிடம் பேசவில்லை. சில நேரங்களில் நானும் டெத் ஓவரில் விக்கெட்டுகள் எடுக்காமல் இருந்துள்ளேன். எனவே ரிஷப் தனது திட்டத்தை செயல்படுத்த விரும்பினார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற இந்தியாவின் ஹீரோ.. ஸ்ரேயாஸ்க்கு ஐசிசி ஸ்பெஷல் விருது.. வெளியான அறிவிப்பு

“அது போன்ற நிலையில் விக்கெட் கீப்பராக இருக்கும் எங்களுடைய கேப்டன் சூழ்நிலையை அறிந்து சரியான முடிவையே எடுத்திருப்பார். எப்படி இருந்தாலும் எங்களுடைய பவுலர்கள் நன்றாக பௌலிங் செய்ததால் போட்டி கடைசி வரை சென்றது. அதனால் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் விளையாடாதது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நான் நினைக்கவில்லை. நான், மார்க்ரம், திக்வேஷ் ஆகிய 3 ஸ்பின்னர்கள் விளையாடியதால் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவையில்லை. மஹி பாயை பொறுத்த வரை தனது நாளில் தன்னுடைய இடத்தில் பந்து இருந்தால் போட்டியை முடித்து விடுவார் என்பதை அனைவரும் அறிவோம்” என்று கூறினார்.

Advertisement