சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற இந்தியாவின் ஹீரோ.. ஸ்ரேயாஸ்க்கு ஐசிசி ஸ்பெஷல் விருது.. வெளியான அறிவிப்பு

Shreyas Iyer
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்று சாதனை படைத்தது. பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே ஆரம்ப முதலே அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் 12 வருடங்கள் கழித்து கோப்பையை வென்று சாதனை படைத்தது.

மேலும் 2002, 2013, 2025* என 3 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபிகளை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது. அந்த வெற்றிக்கு ரோகித் சர்மா தலைமையில் அனைவருமே முக்கிய பங்காற்றினர். இருப்பினும் பேட்டிங் துறையில் ஸ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் விளாசி அதிக ரன்களை அடித்த வீரராக சாதனைப் படைத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

இந்தியாவின் ஹீரோ:

குறிப்பாக ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்த போதெல்லாம் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு சைலன்ட் ஹீரோவாக செயல்பட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியிருந்தார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த “2025 மார்ச் மாதத்தின் சிறந்த வீரர்” என்ற விருதை ஸ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி இந்த விருதை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் 2025 மார்ச் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர், நியூஸிலாந்தின் ஜேக்கப் ஃடுபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்கள். அதில் ஸ்ரேயாஸ் சாம்பியன்ஸ் ட்ராபியை மார்ச் மாதம் இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ஐசிசி விருது:

அதன் காரணமாக ரவீந்திரா, ஃடுபி ஆகியோரை முந்தி ஸ்ரேயாஸ் ஐயர் இந்த விருதை வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விருது வென்றது பற்றி ஸ்ரேயாஸ் ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “மார்ச் மாதத்தின் ஐசிசி சிறந்த பிளேயர் விருதை வென்றதைக் கௌரவமாக கருதுகிறேன். இது சாம்பியன்ஸ் டிராபியை வென்ற மறக்க முடியாத தருணத்திற்குப் பின் கிடைத்துள்ள ஸ்பெஷல் அங்கீகாரம்”

இதையும் படிங்க: ஐபிஎல் முடிந்ததும் வங்கதேசத்தில் இந்திய அணி.. விளையாடும் 3 ஒன்டே, 3 டி20க்கான அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ

“சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற மிகப்பெரிய தொடரில் இந்தியாவின் வெற்றிக்காக என்னால் பங்காற்ற முடிந்தது ஒவ்வொரு கிரிக்கெட்டர்களின் கனவாக இருக்கும். அதற்கு எனக்கு ஆதரவுக் கொடுத்த எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் பஞ்சாப் கேப்டனாக அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement