ஐபிஎல் முடிந்ததும் வங்கதேசத்தில் இந்திய அணி.. விளையாடும் 3 ஒன்டே, 3 டி20க்கான அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ

IND vs BAN
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் 2025 டி20 தொடரில் விளையாடி வருகிறார்கள். விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் வெவ்வேறு அணிகளின் வெற்றிகளுக்காக விளையாடி வருகின்றனர். வரும் மே மாதம் வரை நடைபெறும் ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு மீண்டும் அவர்கள் இந்தியாவுக்காக விளையாட ஒன்று சேர உள்ளனர்.

ஐபிஎல் முடிந்ததும் இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணியினர் அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர். 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் கேப்டனாக விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கடந்த நியூசிலாந்து, மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் ரோஹித் தலைமையில் இந்தியா அடுத்தடுத்த படு தோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

வங்கதேச தொடர்:

அதன் காரணமாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கும் முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. இந்நிலையில் அந்த இங்கிலாந்து தொடருக்கு பின் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் இந்திய அணி விளையாடப் போகும் அந்த சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 17ஆம் தேதி துவங்குகிறது.

அந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள், 3 டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக 2027 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை கேப்டனாக வென்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தற்சமயத்தில் ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று அறிவித்துள்ளார்.

- Advertisement -

அட்டவணை வெளியீடு:

அவருடன் விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி விளையாடும் என்று நம்பலாம். அடுத்ததாக இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் சூரியகுமார் தலைமையில் இளம் இந்திய டி20 அணி களமிறங்க உள்ளது.

இதையும் படிங்க: உண்மைய சொல்லனும்னா இதனால் தான் அஷ்வினை டீம்ல சேக்கல – ஒப்புக்கொண்ட கேப்டன் தோனி

2025 வங்கதேசம் – இந்திய அணிகள் மோதும் தொடர்களின் அட்டவணை:
ஆகஸ்ட் 17: முதல் ஒன்டே, மிர்பூர்
ஆகஸ்ட் 20: 2வது ஒன்டே, மிர்பூர்
ஆகஸ்ட் 23: 3வது ஒன்டே, சட்டோகிராம்
ஆகஸ்ட் 26: முதல் டி20, சட்டோகிராம்
ஆகஸ்ட் 29: 2வது டி20, மிர்பூர்
ஆகஸ்ட் 31: 3வது டி20, மிர்பூர்

Advertisement