தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியில் லக்னோ மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்தது.
அஷ்வினை நீக்க இதுதான் காரணம் : சி.எஸ்.கே கேப்டன் தல தோனி :
லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 30 ரன்களையும் குவித்தனர். பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஷிவம் துபே 43 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த போட்டியின் போது தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படாதது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.
ஏனெனில் சென்னை அணிக்காக மெகா ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் முதல் 6 போட்டிகளில் விளையாடியிருந்த வேளையில் திடீரென ஏழாவது போட்டியில் கழட்டி விடப்பட்டது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியிருந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் 6 போட்டியில் விளையாடிய அஸ்வின் 9.90 ரன்கள் சராசரியுடன் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தால் அவர் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் போட்டி முடிந்து அஸ்வின் ஏன் வெளியேற்றப்பட்டார்? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மகேந்திர சிங் தோனி கூறுகையில் : அஸ்வின் மீது நாங்கள் கூடுதலான அழுத்தத்தை கொடுத்து விட்டோம். அவர் முதல் ஆறு ஓவர்களில் 2 ஓவர்களை மட்டுமே வீசுகின்றார். அதன் பின்னர் தேவைக்கேற்றார் போல் அவரை பயன்படுத்துகிறோம்.
இதையும் படிங்க : இப்போவும் சொல்றேன் உலகிலேயே தோனி அதுல பெஸ்ட்.. ஃபினிஷிங் விட அதை சிறப்பா செஞ்சாரு.. மைக்கேல் கிளார்க்
ஆனால் நேற்றைய போட்டியின் போது இந்த இந்த மாற்றம் அவசியம் என்பதனால் அவருக்கு பதிலாக ஓவர்டனை அணியில் சேர்த்தோம். மேலும் எங்களது அணியில் பேட்டிங்கில் சரியான பலம் உள்ளது. அதனால் பந்துவீச்சு யூனிட்டில் மாற்றம் தேவை என நினைத்தோம். மற்றபடி அஸ்வினை நீக்க வேறு எந்த காரணமும் இல்லை என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.