இந்திய அணிக்காக விளையாடுவது என் கனவு. அது நிஜமானத்தில் மகிழ்ச்சி – இளம்வீரர் பூரிப்பு

ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதில் இந்திய அணியில் பல புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தென் ஆப்ரிக்க தொடரில் சோபிக்க தவறிய சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட வேளையில் ராஜஸ்தானை சேர்ந்த 21 வயது இளம் சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய்க்கு இந்தியா டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு அணிகளிலும் இடம் கிடைத்துள்ளது.

Bishnoi

- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பையில் பங்கேற்று விளையாடிய ரவி பிஷ்னோய் அந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர் 23 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் இந்திய அணியில் தேர்வானது குறித்து பேசியுள்ள ரவி பிஷ்னோய் கூறுகையில் : சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நீல நிறத்தில் நான் விளையாடப் போவது பெருமையாக உள்ளது.

இந்திய அணிக்காக விளையாடுவது என்னுடைய கனவு. அப்படி என்னுடைய கனவு இப்போது நிஜமாகியுள்ளது மகிழ்ச்சி. இவ்வளவு நாட்களாக என்னுடைய வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன் மேலும் அதற்காக என்னை தயார் படுத்திக்கொண்டு இருந்தேன். நிச்சயம் இந்த தொடரில் எனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும். என்னை சிறப்பாக விளையாட வைத்த கும்ப்ளே சாருக்கு நன்றி. அவர்தான் என்னை சரியான முறையில் வடிவமைத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இத்தனை வருஷம் பழகியும் தோனியோட போன் நம்பர் கூட என்கிட்ட இல்ல – ரவி சாஸ்திரி சுவாரசிய பதில்

இந்திய அணியில் நிச்சயம் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என ரவி பிஷ்னோய் கூறியுள்ளார். அதோடு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் ராகுலுடன் மீண்டும் இணைந்து விளையாட இருப்பது சிறப்பான வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement