ரஷித் கானை முந்தி.. 23 வயதிலேயே ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இந்திய வீரர் சாதனை

Ravi Bishnoi 2
- Advertisement -

ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்த உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடியது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுத்த அத்தொடரில் 2024 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணி களமிறங்கியது.

அதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்தியா 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று 2023 உலகக் கோப்பை ஃபைனல் தோல்விக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. அந்தத் தொடரில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட் போன்ற நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களை வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக அடையாளப்படுத்தினர்.

- Advertisement -

நம்பர் ஒன் பவுலர்:
அதே போல பவுலிங் துறையில் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்த ரவி பிஷ்னோய் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார். இந்த நிலைமையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் ரசித் கானை முந்தியுள்ள ரவி பிஷ்னோய் உலகின் புதிய நம்பர் ஒன் பவுலராக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் தொடர் நாயகன் விருது வெல்லும் அளவுக்கு அசத்தியதால் 692 புள்ளிகளை பெற்றுள்ள ரசித் கானை முந்தியுள்ள அவர் தற்போது 699 புள்ளிகளுடன் நம்பர் ஒன் பவுலராக முன்னேறியுள்ளது. கடந்த 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடிய இந்தியாவுக்காக அறிமுகமானார்.

- Advertisement -

அதில் இதுவரை 21 டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை 7.50 என்ற எக்கனாமியில் எடுத்துள்ள அவர் 23 வயதிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் வருங்கால நம்பிக்கை நட்சத்திர பவுலராக முன்னேறியுள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதே போல பேட்டிங் தர வரிசையில் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இதையும் படிங்க: என்ன செலக்ட் பண்றீங்கனா முன்னாடியே சொல்லுங்க.. பி.சி.சி.ஐ மீட்டிங்கில் – ரோஹித் சர்மா அதிரடி

மேலும் அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி கண்ட இந்தியா தொடர்ந்து 265 புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement