ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் இளம் வீரர்களை வாங்கியது. குறிப்பாக இதற்கு முன் சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இல்லாத பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோரை தலா 14. 20 கோடி என்று பெரிய தொகைக்கு சிஎஸ்கே வாங்கியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
2025 சீசனில் மோசமாக விளையாடிய சிஎஸ்கே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. அது போக 44 வயதாகும் எம்.எஸ். தோனி அடுத்த வருடம் ஓய்வு பெறுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. எனவே வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு புதிய அணியை உருவாக்கும் நோக்கத்திலேயே சிஎஸ்கே அணி இளம் வீரர்களை வாங்கியுள்ளது என்று சொல்லலாம்.
2026 ஐபிஎல் சிஎஸ்கே அணி:
குறிப்பாக தோனிக்கு பின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்காக ஜடேஜாவை ராஜஸ்தானுக்கு கொடுத்த சிஎஸ்கே அணி சஞ்சு சம்சானை வாங்கியுள்ளது. இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான எங்களுடைய தரமான 12 பேர் கொண்ட அணியை சொல்லுங்கள் என்று சிஎஸ்கே அணி ட்விட்டரில் கேட்டுள்ளது. அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தம்முடைய சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனை இம்பேக்ட் வீரருடன் சேர்த்து பதிலளித்துள்ளார்.
அந்த தேர்வில் முதல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கடந்த வருடம் சதமடித்து அசத்திய ஆயுஷ் மாத்ரேவை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அவருடன் இந்தியாவுக்காக ஓப்பனிங்கில் 3 சதமடித்துள்ள சஞ்சு சாம்சனை 2வது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அஸ்வின் தேர்ந்தெடுத்துள்ளார். 3வது இடத்தில் கேப்டன் ருதுராஜை தேர்ந்தெடுத்துள்ள அஸ்வின் 4வது இடத்தில் ஆல் ரவுண்டர் துபேவை தேர்ந்தெடுத்துள்ளார்.
அஸ்வின் தேர்வு:
5வது இடத்தில் குட்டி ஏபிடி என்றழைக்கப்படும் ப்ரேவிஸை தேர்ந்தெடுத்துள்ள அஸ்வின் ராஜஸ்தானுக்கு சென்ற ஜடேஜாவுக்கு பதிலாக பிரசாந்த் வீரை சேர்த்துள்ளார். விக்கெட் கீப்பராக எம்எஸ் தோனியை தேர்ந்தெடுத்துள்ள அவர் 8வது இடத்தில் அகில் ஹொசைன் அல்லது மாட் ஹென்றியை தேர்ந்தெடுத்துள்ளார். நூர் அஹ்மதை ஸ்பின்னராக தேர்ந்தெடுத்துள்ள அஸ்வின் வேகப்பந்து வீச்சு துறையில் ஆஸ்திரேலியாவின் நாதன் மாற்றும் கலீல் அஹ்மதை தேர்ந்தெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வெல்டன் அகர்கர்.. இந்த செலெக்சனை எதிர்பார்க்கல.. கடைசி நேரத்தில் அவரை சேர்த்தது மகிழ்ச்சி.. ஸ்ரீகாந்த் பாராட்டு
இம்பேக்ட் வீரராக அன்சுல் கம்போஜ், கார்த்திக் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான் ஆகியோரில் ஒருவரை சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் தேர்ந்தெடுக்கலாம் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். அஸ்வின் தேர்ந்தெடுத்த 2026 ஐபிஎல் சிஎஸ்கே அணி: ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, தேவால்ட் ப்ரேவிஸ்*, பிரசாந்த் வீர், எம்எஸ் தோனி, அகில் ஹொசைன்/மாட் ஹென்றி*, கலீல் அஹ்மத், நாதன் எலிஸ்*, நூர் அஹ்மத்*



