ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் துணைக் கேப்டனாக விளையாடி வந்த சுப்மன் கில் கடைசி நேரத்தில் அதிரடியாக நீக்கப்பட்டார். ஏனெனில் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறிய அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
இருப்பினும் புதிய ஆல் ஃபார்மட் கேப்டனாக அவரை வளர்க்க நினைத்த தேர்வுக்குழு டி20 அணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தது. எனவே பேட்டிங்கில் தடுமாறினாலும் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தால் கில் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் நினைத்தனர். இருப்பினும் அணியின் நலனை விட எதுவும் முக்கியமில்லை என்று கருதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அவரை கழற்றி விட்டது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வெல்டன் அகர்கர்:
அது போக ஜிதேஷ் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பை இறுதிப் போட்டியில் சதமடித்து ஜார்க்கண்ட் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய இசான் கிசானை பேக்-அப் கீப்பராக தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் சுப்மன் கில்லை கடைசி நேரத்தில் அகர்கர் கழற்றி விடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியை தேர்ந்தெடுத்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
அதே போல உள்ளூரில் அசத்தியதற்காக இசான் கிசான் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த முடிவு எனக்கு அதிர்வைக் கொடுத்தது. இது மிகவும் சூப்பரான செலக்சன். அவர்கள் சுப்மன் கில்லை நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடினார்”
ஸ்ரீகாந்த் பாராட்டு:
“ரிங்கு சிங் ஏற்கனவே அணியில் இருந்தார். இஷான் கிசான் தேர்வு வட்டத்திலேயே இல்லை. ஆனால் இது மிகவும் சிறப்பான தேர்வு என்று நான் சொல்வேன். வெல்டன் அஜித் அகர்கர் மற்றும் தேர்வுக்குழு. குறிப்பாக இஷான் கிசான் தேர்வு சிறப்பானது. ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களை தேர்வாளர்கள் மதித்துள்ளார்கள்”
இதையும் படிங்க: என்னை காப்பாற்றும் அந்த 14 பேருக்கும்.. நான் ப்ளாஸ்ட்டான என்னாகும்ன்னு தெரியும்.. ஃபார்ம் பற்றி சூரியகுமார் பேட்டி
“உள்ளூரில் அசத்திய காரணத்தால் அவர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். ரன்கள் அடித்தது மட்டுமின்றி அவர் தம்முடைய மாநில அணியை வெற்றி பெற வைத்துள்ளார். வெல்டன் இசான். உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன். இங்கே ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ள அவர் 2023 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்தவர் என்பதை மறக்கக்கூடாது” என்று கூறினார்



