டெல்லியை சேர்ந்த 14 வயது சிறுவனை அணியில் இணைத்த தெ.ஆ நிர்வாகம் – இந்த மாஸ்டர் பிளான் எதுக்கு?

Raunak
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை மறுதினம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்க உள்ளது. ஜூன் 9ஆம் தேதி முதலாவது டி20 போட்டியில் விளையாட இருக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது தெம்பா பவுமா தலைமையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இடம் பெறாததால் கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அனுபவம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

INDvsRSA toss

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி எவ்வாறு தென்னாப்பிரிக்க அணியை சமாளிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் நிலவிவர மறுபக்கம் தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஒரு வித்தியாசமான முறையில் தங்களது பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதாவது அயல்நாட்டு மைதானங்களை போன்று இந்திய மைதானங்களில் இருக்காது என்பதாலும் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைப்பு இருக்கும் என்பதனாலும் சிறப்பு பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது என்பதனால் தற்போது சுழற்பந்து வீச்சினை எதிர்கொள்ள தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு முக்கிய நிகழ்வாக டெல்லியைச் சேர்ந்த 14 வயது வீரரான ரானக் வகேலா என்கிற இளம்வீரரை வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அணியில் இணைத்துள்ளது தென்னாப்பிரிக்க நிர்வாகம்.

RSA

மேலும் அவரை வலைப்பயிற்சியில் பந்துவீச வைத்து பேட்ஸ்மேன்களை பயிற்சி அளித்து வருகின்றனர். ஏனெனில் எப்போதுமே அயல்நாட்டு பேட்ஸ்மேன்கள் இந்திய மண்ணில் ஸ்பின் பவுலிங்க்கு எதிராக கஷ்டப்படுவார்கள் என்பதனால் இந்த சிறப்பு பயிற்சியினை தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அந்நாட்டு பயிற்சியாளர்கள் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அதே போன்று இந்திய மைதானத்தில் சுழற்பந்து வீச்சு தான் அதிகம் ஒத்துழைக்கும் என்பதனால் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களையும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறது. தென்ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை அசால்டாக விளையாடுவார்கள் என்பதனால் தற்போது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து தீவிர பயிற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 சீசனில் முதல் கோப்பை கனவை நிஜமாக்க பஞ்சாப் நீக்கவேண்டிய வீரர்களின் பட்டியல்

டெல்லியை சேர்ந்த ரானக் வகேலா என்பவர் 16 வயதுக்கு உட்பட்டோர் அணியில் விளையாடி வருகிறார். அதேபோன்று வெங்கடேஷ் கிரிக்கெட் அகாடமியில் விளையாடி வரும் அவர் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதனால் அவரை வைத்து தென்ஆப்பிரிக்க அணி வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement