ஐபிஎல் 2023 சீசனில் முதல் கோப்பை கனவை நிஜமாக்க பஞ்சாப் நீக்கவேண்டிய வீரர்களின் பட்டியல்

MI vs PBKS
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் இம்முறையாவது கோப்பையை வெல்வோம் என்ற ஏக்கத்துடன் புதிய கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. ஏனெனில் கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் அடிக்கடி கேப்டன்களை மாற்றி வரும் அந்த அணி ஏலத்தில் தரமான வீரர்களை குறைந்த விலையில் வாங்கும் யுக்தியை கையாளாமல் பெரும்பாலும் நட்சத்திர அந்தஸ்துடைய வீரர்களை பெரிய தொகை கொடுத்து வாங்கும் அணியாக இருந்து வருகிறது. மேலும் 2020இல் டெல்லியை பார்த்து பெயரையும் உடையையும் மாற்றியும் கோப்பையை வெல்ல முடியாத அந்த அணிக்கு இம்முறை கேப்டன்ஷிப் அனுபவமில்லாத மயங்க் அகர்வால் தலைமையில் களமிறங்கிய பஞ்சாப் வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படாமல் மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்தனர்.

pbks 1

- Advertisement -

பெரும்பாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதையே சாதனையாக பார்க்கும் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது சர்வசாதாரணமாகும். அதை இந்த வருடமும் கச்சிதமாக செய்த அந்த அணியால் 14 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்று 6-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. மொத்தத்தில் இந்த வருடமும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அந்த அணியின் கனவு நிறைவேறாத நிலையில் அடுத்த வருடம் அந்த லட்சியத்துடன் மீண்டும் களமிறங்க உள்ளது. அதில் வெற்றியை சுவைக்க இந்த வருடம் சுமாராக செயல்பட்டவர்களை கழற்றி விட வேண்டியுள்ளதால் அவர்களை பற்றி பார்ப்போம்.

1. ஓடென் ஸ்மித்: தனது அறிமுக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 6 கோடி என்ற பெரிய தொகைக்கு விளையாடிய இவர் 6 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை எடுத்தாலும் 11.87 என்ற படுமோசமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார்.

Rahul tewatia Odean Smith

குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்துகளில் ராகுல் திவாடியா 2 சிக்சர்களை அடிக்கும் அளவுக்கு மோசமாக பந்துவீசிய இவர் பேட்டிங்கிலும் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே அடுத்த வருடம் இவரை விடுவித்து வேறு நல்ல விதைகளை வாங்கலாம்.

- Advertisement -

2. ஷாருக்கான்: கடந்த வருடம் 5.25 கோடி என்ற தொகையில் 11 போட்டிகளில் 153 ரன்களை எடுத்த இவர் சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2021 தொடரில் சிக்ஸர் அடித்து தமிழகத்துக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததால் இந்த வருடம் மீண்டும் அதே பஞ்சாப் இவரை 9 கோடிக்கு போட்டிபோட்டு பெரிய தொகைக்கு வாங்கியது.

rashid Khan Sharukahan

ஆனால் தமிழகத்தின் பினிஷர் என்று கருதப்படும் இவர் இந்த வருடம் வெறும் 8 போட்டிகளில் 117 ரன்களை 16.71 என்ற மோசமான சராசரியில் 108.33 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். எனவே அடுத்த வருடம் இவரை விடுவித்து அடுத்த வேண்டுமானால் வேண்டுமானால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

- Advertisement -

3. நாதன் எலிஸ்: ஆஸ்திரேலியா சுழல் பந்து வீச்சாளரான இவர் 75 லட்சத்துக்கு வாங்கப்பட்ட நிலையில் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை எடுத்தாலும் 9.70 என்ற எக்கனாமியில் சுமாராக பந்து வீசினார்.

Nathan Ellis

மேலும் ராகுல் சஹர், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இவரை விடுவித்து வேறு வீரர்களை வாங்கலாம்.

- Advertisement -

4. ஹர்ப்ரீத் ப்ரார்: கடந்த வருடம் பஞ்சாப் அணிக்காக அசத்தலாக பந்து வீசியதால் 3.80 கோடிக்கு மீண்டும் வாங்கப்பட்ட சுழல் பந்து வீச்சாளரான இவர் இம்முறை 5 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை எடுத்தாலும் 9.13 என்ற சுமாரான எக்கனாமியில் பந்துவீசினார். 2021 தவிர 2019, 2020 ஆகிய வருடங்களில் ரன்களை வாரி வழங்கிய இவரை விடுவித்து வேறு சுழல் பந்துவீச்சாளர்களை வாங்க பஞ்சாப் முயற்சிக்கலாம்.

Sandeep-1

5. சந்தீப் சர்மா: கடந்த வருடங்களில் ஹைதராபாத் அணிக்கான அசத்திய இவர் இந்த வருடம் 50 லட்சம் என்ற குறைவான தொகைக்கு பஞ்சாப் அணிக்காக விளையாடிய நிலையில் 5 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை 7.65 என்ற எக்கனாமியில் 76.50 என்ற மோசமான சராசரியில் பந்துவீசினார்.

அதாவது ஒருசில போட்டிகளில் அசத்தும் இவர் பெரும்பாலான போட்டிகளில் ரன்களை வாரி வழங்குகிறார். மேலும் ரபாடா, அர்ஷிதீப் சிங் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இவரை விடுவித்து வேறு யாரையாவது பஞ்சாப் வாங்க முயற்சிக்கலாம்.

Johnny Bairstow

சந்தேக பட்டியல்:
1. ஜானி பேர்ஸ்டோ: இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி தொடக்க வீரரான இவர் 6.75 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில் 11 போட்டிகளில் 253 ரன்களை 144.57 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 23.00 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்தார்.

இவரின் தரத்திற்கு இது குறைவாக இருப்பதாலும் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் போன்ற தொடக்க வீரர்கள் இருப்பதாலும் அடுத்த வருடம் இவரை விடுவிக்கலாம் அல்லது விடுவித்து குறைந்த தொகைக்கு வாங்கலாம்.

Advertisement