ரஷீத் கானை யாரும் சாதாரணமாக நினைக்க வேண்டாம்..! இந்திய அணிக்கு எச்சரிக்கை செய்த பயிற்சியாளர்..!

சமீபத்தில் டெஸ்ட் அங்கீகாரத்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இந்த மாதம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா வரவுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் மேஜிக் பந்துவீச்சளரான ரஷீத் தான் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். இதனால் இந்திய அணி மிக கவனமாக விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான லால்சந்த் ரஜ்புத் தெரிவித்துள்ளார்.

RashidKhan

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி. இந்த தொடரின் முதல் போட்டியில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளை பெற்றதோடு, டி20 தொடரில் 31 போட்டியில் 50 விக்கெட் எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும் இந்த தொடரின் இரண்டவது போட்டியிலும், ரஷித் கானின் ஆதிக்கம் தொடங்கியது. இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய ரஷீத் கான் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் அந்த போட்டியில் ஆப்கானிஸ்த்தான் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

Lalchand-Rajput

இதையடுத்து ஆப்கானிஸ்த்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வரும் ஜூன் 14 ஆம் தேதி இந்தியா வரவிருக்கிறது. இந்நிலையில் ரஷித் கானின் பந்துவீச்சை பற்றி லால்சந்த் ரஜ்புத் தெரிவிக்கையில் “ரஷித்கான் அபாயகரமான சுழல் பந்துவீச்சாளர், ஒருவேளை இந்த போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானத்தின் பிட்ச், பந்து நன்றாக சுழலும் நிலையில் அமைக்கப்பட்டால் நமக்கு(இந்தியாவிற்கு) சிரமம்தான். ரஷித்கான் பந்தை வேகமாக அடிக்க முயற்சிக்கக் கூடாது. அவரது பந்துகளை பின்னங்கால் பயன்படுத்தி ஆட வேண்டும்” என்று கூறியுள்ளார்.