
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்கள் அனைவர்க்கும் ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
தற்போது 38 வயதாகும் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருந்தும் இப்படி திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. ஆனாலும் தான் தொடர்ந்து டி20 மற்றும் கிளப் போட்டிகளில் விளையாட இருப்பதாக அஷ்வின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உலகெங்கிலும் இருந்து குவிந்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லத்தீப்பும் அவருக்கு மனம் திறந்த பாராட்டினை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
அஸ்வினுக்கு இந்திய அணியில் சரியான மரியாதை கிடைக்காமல் போயிருப்பதாலும் அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எனக்கு முழுவதுமாக தெரியாது. அதேபோன்று வாஷிங்டன் சுந்தர் வருகையும் அவரது கரியரின் முடிவுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும் ஓய்வு என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு.
அதனை நாம் மதித்தாக வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு லெஜென்ட்கள் இருக்கின்றனர். ஆனால் அஸ்வின் போன்று கிரிக்கெட் குறித்த அறிவுடைய மேதை வெகு சிலரே இருக்கின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் குறித்த தெளிவான அறிவு அஸ்வினிடம் வேற லெவலில் இருக்கிறது.
இதையும் படிங்க : மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட அசவுகரியம்.. ஆஸ்திரேலிய அணியில் இருந்து வெளியேறிய – நட்சத்திர வீரர்
எனவே நிச்சயம் அவர் எதிர்காலத்தில் பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகிய நிர்வாக பதவிகளை கூட கைப்பற்ற முடியும். அந்த அளவுக்கு அவர் திறமைசாலி. அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.