ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வாரியம் மற்றும் ஆசியக் கவுன்சில் தலைவர் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆனால் பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது கைகளால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணி தெரிவித்து விட்டது.
அதனால் அவமானப்பட்ட நக்வி அங்கிருந்து கையோடு கோப்பையை எடுத்துச் சென்றார். மறுபுறம் வேறு யாருடைய கையிலாவது கொடுத்து கோப்பை கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணி 45 நிமிடங்கள் களத்தில் காத்திருந்தது. அப்போது இந்தியா வாங்க மறுத்து விட்டதால் கோப்பையை வழங்கவில்லை என்று ஆசிய கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு தடை:
அதற்காக வருத்தப்படாத இந்திய அணியினர் தங்களுடைய கையில் கோப்பையை இருப்பது போல் கொண்டாடி நக்வி மற்றும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் நியாயப்படி ஆசிய கவுன்சில் தலைவர் கைகளில் கோப்பையை வாங்காத இந்திய அணியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் தெரிவித்துள்ளார். ஆனால் ஐசிசி தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் ஐசிசி இந்திய அணியை தடை செய்ய மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்தியா செய்த செயல் அசிங்கமானது என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஆசியக் கோப்பை மற்றும் விருதுகளை ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து வாங்க மறுத்த இந்திய அணி ஐசிசியால் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு நல்ல வேட்பாளராக உள்ளனர்”
அசிங்கமான இந்தியா:
“இதுவே வேறு விளையாட்டாக இருந்தால் இது மூடப்பட வேண்டிய நிகழ்வாக இருக்கும். ஆனால் ஐசிசி தலைவர், தலைமை நிர்வாக இயக்குனர், தலைமைப் பொருளாதார அலுவலர், விளம்பர அலுவலர், நிகழ்ச்சி மற்றும் தொடர்பு அலுவலர் ஆகியோர் இந்தியர்களாக உள்ளனர். அதனால் இடைநீக்கம் விதிக்கப்படும் என்பது போல் தெரியவில்லை”
இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேசுனாங்க.. ஆனா நான் இப்படிதான் திருப்பி கொடுக்க நெனச்சேன் – திலக் வர்மா
“ஆனால் மீண்டும் ஒருமுறை இந்தியா ஜென்டில்மேன் தன்மையை உடைத்து விளையாட்டுணர்வுக்கு எதிராக செயல்பட்டது கிரிக்கெட்டுக்கு அசிங்கமான நாளை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார். இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் அப்படி பார்த்தால் அமீரகத்துக்கு எதிரானப் போட்டியை வேண்டுமென்றே ஒரு மணி நேரம் தாமதப்படுத்திய பாகிஸ்தானை தான் முதலாவதாக தடை செய்ய வேண்டும் என்று அவருக்கு பதிலடி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.



