பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேசுனாங்க.. ஆனா நான் இப்படிதான் திருப்பி கொடுக்க நெனச்சேன் – திலக் வர்மா

Tilak Varma
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இந்த தொடரில் மூன்றாவது முறையாக வீழ்த்தி ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

பாகிஸ்தான் வீரர்களுக்கு பேட்டால் பதில் கொடுக்க விரும்பினேன் : திலக் வர்மா

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த மாபெரும் இறுதி போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 146 ரன்களை அடிக்க 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கினை துரத்தி விளையாடிய இந்திய அணியானது 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் வரிசையில் வந்த திலக் வர்மா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அவரது சிறப்பான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி வெற்றி பெற்றது என்றால் அது மிகையல்ல. ஏனெனில் நான்காவது இடத்தில் களமிறங்கிய திலக் வர்மா 53 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஒருவேளை அவரும் விரைவில் ஆட்டமிழந்து இருந்தால் நிச்சயம் இந்த போட்டியின் முடிவு மாறியிருக்க கூட வாய்ப்பிருந்திருக்கும்.

இதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற திலக் வர்மாவே மிக முக்கியமான காரணமாக இருந்தார். இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியின் போது தன்னை களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் வார்த்தையால் சீண்டியதாகவும் அதற்கு தான் எவ்வாறு பதிலடி கொடுத்தேன் என்பது குறித்தும் திலக் வர்மா ஒரு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : 13-14 ஆவது ஓவரின் போது நானும் ஷிவம் துபேவும் விளையாடிக் கொண்டிருக்கையில் பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேர் எங்களிடம் வந்து ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தனர். அதிலும் குறிப்பாக என்ன நோக்கி பல்வேறு வார்த்தைகளை வெளிப்படுத்தினர். ஆனால் நான் எதையும் காதில் வாங்கவில்லை. என்னுடைய பேட்டால் மட்டுமே அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : நான் ஒன்னும் பார்ம் அவுட் ஆகல.. சீக்கிரம் என்னோட பெஸ்ட்டை பாப்பீங்க – சூரியகுமார் யாதவ் ஓபன்டாக்

அதனால் நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன். மேலும் நான் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடும் போது அவர்கள் என்னை எதிர்த்து பேச வார்த்தைகள் இருக்காது என்று நினைத்து மிகச் சிறப்பாக விளையாடியதாக திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement