டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை தோனி கிட்ட இருந்த அந்த பவர் கோலிக்கு கிட்ட இல்லை – ரஷீத் லத்தீப் கருத்து

latif
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மிஷினாக இந்திய அணிக்கு பெரிய பங்களிப்பினை அளித்து வந்தார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் இருந்து வருவது அவர் மீது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதோடு நடைபெற்று முடிந்த சமீபத்திய தொடர் அனைத்திலும் கோலி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் அவர் மீது இன்னும் கூடுதலாக விமர்சனங்கள் எழுந்தன.

Virat Kohli IND vs PAK

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஹாங்காங் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆட்டம் இழக்காமல் 59 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர் இல்லை என்றும் அவரால் ரோஹித், சூரியகுமார் யாதவ் போன்று எப்போதும் வர முடியாது என்றும் பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டனான ரஷீத் லத்தீப் ஒரு கருத்தினை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் :

Kohli

விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே ஒரு சிறந்த வீரராக இருந்ததில்லை. ஏனெனில் அவரை நாம் எப்போதும் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் தான் ஒப்பிட்டு பேசி வருகிறோம். ஆனால் அவர்கள் அனைவருமே டி20 கிரிக்கெட்டில் பெரிய மேட்ச் வின்னர்கள் கிடையாது. அவர்கள் அனைவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடக்கூடிய வீரர்கள்.

- Advertisement -

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை விராட் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர் என்று கூறலாம். ஆனால் டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அதிரடியாக விளையாடும் வீரர்களையே நல்ல வீரர்கள் என்று கூற முடியும. விராட் கோலி ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் போது கூட மிகவும் பொறுமையாகவே ஆடியுள்ளார். ஆனால் தோனி ஒரு வித்தியாசமான வீரர்.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய மிட்சல் ஸ்டார்க் – விவரம் இதோ

ஏனெனில் அவர் மூன்று நான்கு டாட் பால்களை விளையாடினாலும் அடுத்ததாக மூன்று நான்கு சிக்ஸர்களை அவரால் அடிக்க முடியும். எனவே அவர் டாட் பால் விளையாடினால் கூட அதனை அவர் ஈடு செய்து விடுவார். ஆனால் கோலி 30 முதல் 35 பந்துகளை எதிர் கொண்ட பின்னர் தான் அடித்து ஆட ஆரம்பிப்பார். எனவே அவர் மிகச்சிறந்த டி20 வீரர் கிடையாது என ரஷீத் லத்தீப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement