ஒருநாள் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய மிட்சல் ஸ்டார்க் – விவரம் இதோ

Starc
Advertisement

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்று முடிந்தது.

ZIMvsAUS

அதன்படி இன்று நடைபெற்று முடிந்த இந்த கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜிம்பாப்வே அணி அவர்களை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தோல்வியை பரிசளித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஜிம்பாப்வே அணியானது 31 ஓவர்களிலேயே 141 ரன் களுக்கு ஆஸ்திரேலியா அணியை சுருட்டி அசத்தியது.

- Advertisement -

பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 39 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

Starc

அதன்படி இந்த ஒருநாள் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 101 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்த அவர் 199 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மிட்சல் ஸ்டார்க் இதுவரை உலகில் மிகச்சிறந்த பவுலராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கெதிரான இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதாவது அவரது 102 வது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற அவர் இன்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி எப்போதுமே சூரியகுமார், ரோஹித் அளவுக்கு சிறந்த டி20 வீரராக வரமுடியாது – முன்னாள் பாக் வீரர் கருத்து

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த சக்லைன் முஷ்டாக் 104 போட்டிகளில் 200 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். அவரது இந்த சாதனையை இரண்டு போட்டிகள் வித்தியாசத்தில் 102 போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது ஸ்டார்க் முறியடித்துள்ளார். அவரை தொடர்ந்து பிரட் லீ மூன்றாவது இடத்திலும், ஆலன் டோனால்ட் நான்காவது இடத்திலும், வக்கார் யூனிஸ் ஐந்தாவது இடத்திலும், ஷேன் வார்ன் ஆறாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement