விராட் கோலி எப்போதுமே சூரியகுமார், ரோஹித் அளவுக்கு சிறந்த டி20 வீரராக வரமுடியாது – முன்னாள் பாக் வீரர் கருத்து

Avesh Khan Virat Kohli KL rahul Chahal India
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 4 சுற்று போட்டிகள் துவங்கியுள்ளன. ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளுக்கு எதிரான தன்னுடைய 2 லீக் போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து செப்டம்பர் 4ஆம் தேதியன்று தனது முதல் சூப்பர் 4 போட்டியில் மீண்டும் பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளவிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIrat Kohli IND vs HK

- Advertisement -

அதேபோல் இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்ற விமர்சனத்துக்கு பெரிய அளவில் ரன்களை குவித்து பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் கிட்டத்தட்ட 50 என்ற அளவிலான பேட்டிங் சராசரியில் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓய்வெடுத்து இந்த தொடரில் புத்துணர்ச்சியுடன் விளையாடி வருகிறார்.

அசத்திய சூர்யா:
அதில் அழுத்தமான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெற்றி பங்காற்றினாலும் மெதுவாக விளையாடியதற்காக மீண்டும் விமர்சனங்களை சந்தித்த அவர் ஹாங்காங்க்கு எதிரான 2வது போட்டியில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் தடுமாறாமல் 59* (44) ரன்களை 130+ ஸ்டிரைக் ரேட்டில் விளாசி பார்முக்கு திரும்பியது போல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அந்தப் போட்டியில் அவருடன் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நாலாபுறமும் சுழன்றடித்த சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 68* (26) ரன்களை தெறிக்கவிட்டது தான் அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது.

Suryakumar Yadav

தற்சமயத்தில் விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் ஆகியோரை விட உச்சகட்ட பார்மில் எப்பேற்பட்ட அழுத்தமான சூழ்நிலையில் களமிறங்கினாலும் முதல் பந்தியிலிருந்தே அதிரடியாக விளையாடும் திறமை பெற்றுள்ள அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் என்று நிறைய ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் அழைக்கின்றனர். இந்நிலையில் பேட்டிங்கில் 50 என்ற அற்புதமான சராசரியை வைத்திருந்தாலும் சூர்யகுமார் யாதவ் அல்லது ரோஹித் சர்மா போன்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விராட் கோலியால் விளையாட முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் அதுவே அவர் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் தவிர்ப்பதற்கும் காரணமென்று கூறியுள்ளார்.

- Advertisement -

சூர்யா, ரோஹித் மாதிரி:
அதனால் சூரியகுமார் யாதவ், ரோகித் சர்மா போன்றவர்களைப் போல் விராட் கோலி எப்போதுமே சிறந்த டி20 வீரராக வர முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “விராட் எப்போதும் சூரியகுமார் யாதவ் அல்லது ரோகித் சர்மா போல வர முடியாது. பெங்களூரு அணிக்காகவும் அவர் அதே ஸ்டைலில் தான் விளையாடுகிறார். அதனால் தான் அவரால் சாம்பியனாகவும் முடியவில்லை. இந்த விஷயத்தில் எம்எஸ் தோனியை நீங்கள் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்”

latif

“அவர் டாட் பந்துகளை விளையாடினாலும் இறுதியில் அதை அதிரடியான சிக்ஸர்களை பறக்க விட்டு ஈடுகட்டி விடுவார். ஆனால் அது போல் விராட் கோலியால் முடியாது. எனவே ஹாங்காங்க்கு எதிராக விராட் கோலி மெதுவாக அல்லது வேகமாக விளையாடினாரா என்பதைப் பற்றி விவாதிக்க தேவையில்லை. அதுதான் அவருடைய இயற்கையான ஆட்டமாகும். ஐபிஎல் தொடரில் அவர் எப்போதும் 30 – 35 ரன்கள் அடித்த பின்பு தான் பெரிய ஷாட்டுகளை அடிக்க முயற்சிப்பார். அதேபோல் ரோகித் சர்மா எப்போதும் பவர் பிளே ஓவர்களைப் பயன்படுத்தி கடைசி வரை நின்று விளையாட முயற்சிப்பார்”

“விராட் கோலி எப்போதும் சிறந்த டி20 வீரர் கிடையாது. அவருடைய சராசரி நன்றாக உள்ளது ஆனால் ஸ்ட்ரைக் ரேட் சுமாராக உள்ளது. அவரை நாம் ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், பாபர் அசாம் ஆகியோருடன் ஒப்பிடுகிறோம். ஆனால் அந்த யாருமே டி20 கிரிக்கெட்டில் மேட்ச் வின்னர்கள் கிடையாது” என்று கூறினார்.

Rohith

அதாவது டி20 கிரிக்கெட்டுக்கு முக்கியம் ஸ்ட்ரைக் ரேட் என்ற நிலைமையில் அதில் தடுமாறும் விராட் கோலி 50 என்ற பேட்டிங் சராசரி வைத்திருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் அல்லது ரோகித் சர்மா போன்ற மேட்ச் வின்னராக வர முடியாது என்று ரசித் லதீப் தெரிவிக்கிறார்.

Advertisement