பாக் வீரர்களான இவர்களை போல 2 வீரர்கள் நம்மிடம் இல்லையே என்று இந்தியா சொல்லும் நாள் வரும் – ரஷீத் லத்தீப்

latif
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் லீக் சுற்றுகளில் முடிவிலேயே தொடரில் இருந்து வெளியேறியது. ஆனால் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று கருதப்பட்ட பாகிஸ்தான் அணியானது பலமான அணிகளை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. அப்படி இந்த உலகக் கோப்பைத் தொடரில் சரி அதற்குப் பிறகும் சரி சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி தற்போது முன்னணி அணியாக திகழ்கிறது.

Hafeez

- Advertisement -

அந்த அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு முக்கிய காரணமாக துவக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் திகழ்கின்றனர். அண்மையில் பாகிஸ்தான் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து 2021 ஆம் ஆண்டில் நான்கு முறை 150 ரன்னுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

முன்பெல்லாம் பாகிஸ்தான் அணியில் விராட் கோலி போன்ற, கேஎல் ராகுல் போன்ற, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இல்லை என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அந்த நிலை மாறி இனி பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இல்லையே என்று தோன்றும் அளவிற்கு அவர்கள் மாறப் போகிறார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

rizwan

இதுகுறித்து அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் விராட் கோலி, ரோஹித், ராகுல் போன்ற வீரர்கள் இல்லை என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இனிவரும் காலத்தில் நிச்சயம் பாகிஸ்தான் அணி இதே போன்று சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியில் பாபர் மற்றும் ரிஸ்வான் போன்ற வீரர்கள் இல்லை என்று அவர்கள் கூறும் நாள் விரைவில் வரும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உச்சம் தொட்டு சாதனை படைத்த ஜோ ரூட் – பாண்டிங் சச்சின் சாதனை முறியடிப்பு

பாகிஸ்தான் அணியை சிறப்பான நிலைக்கு கொண்டு செல்லப்போகும் அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் என ரஷீத் லத்தீப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement