டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உச்சம் தொட்டு சாதனை படைத்த ஜோ ரூட் – பாண்டிங் சச்சின் சாதனை முறியடிப்பு

Root
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகல் இரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

aus vs eng

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 473 ரன்களை குவிக்க அடுத்ததாக இங்கிலாந்து அணி 236 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய தற்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதன்படி முதல் இன்னிங்சில் 62 ரன்களை குவித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

root 1

இதன்மூலம் ஒரே வருடத்தில் 1600 ரன்களுக்கு மேல் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், கவாஸ்கர் ஆகியோர் சாதனையை தற்போது ஜோ ரூட் முறியடித்துள்ளார். மேலும் ஒரே வருடத்தில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்திற்கு ஜோ ரூட் முன்னேறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியின் மிகப்பெரிய பலமே இவர்கள்தான். சக்ஸஸ் சீக்ரெட்டும் அதுதான் – புஜாரா கருத்து

இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது யூசப் 1788 ரன்களுடன் முதலிடத்திலும், அதனை அடுத்து விவியன் ரிச்சர்ட்ஸ் 1710 ரன்களையும், மூன்றாவது இடத்தில் கிரேம் ஸ்மித் 1656 ரன்களும் குவித்துள்ளனர். தற்போது இவர்களின் வரிசையில் 4வது இடத்தில் ஜோ ரூட் 1606 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement