இந்திய அணியின் மிகப்பெரிய பலமே இவர்கள்தான். சக்ஸஸ் சீக்ரெட்டும் அதுதான் – புஜாரா கருத்து

Pujara
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா சென்று அடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்த டெஸ்ட் தொடரானது வரும் 26-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் பலம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Pujara

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் பலமே நமது வேகப்பந்து வீச்சாளர்கள் தான். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டில் இந்திய அணி விளையாடும் போது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எந்த நாட்டில் விளையாடினாலும் நமது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர்களை வீழ்த்துகின்றனர்.

குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் நமது வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருந்ததே அதற்கு எடுத்துக்காட்டு. இந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் இந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அவர்களது 20 விக்கெட்டுகளை கைப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

ind

அதற்கான வல்லமையும் நமது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களிடம் உள்ளது என்று புஜாரா கூறியுள்ளார். மேலும் அயல்நாட்டில் இந்திய அணி வெற்றி பெறும் போதெல்லாம் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு அதிகம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் அணுகுமுறை எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா இந்தவொரு விஷயத்தில் அவர் மோசம் – கங்குலி பேட்டி

இந்த தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி டெஸ்ட் அணியில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் என ஆறு வேகப் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement