எல்லாரும் விராட் கோலியையே குறை சொல்றிங்க, மற்ற இந்திய வீரர்களை பற்றி பேசாதது ஏன் – பிசிசிஐக்கு பாக் வீரர் கேள்வி

Kohli
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை இந்தியா சந்தித்தது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 178 ரன்களை சேஸிங் செய்து வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் நடந்த டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி கொடுத்தது. அந்த நிலைமையில் துவங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2-வது போட்டியில் தோல்வியடைந்ததால் 1 – 1* (3) என்ற கணக்கில் தற்போது தொடர் சமனில் உள்ளது.

Kohli

- Advertisement -

இந்த சுற்றுப் பயணத்தில் 11, 19, 11, 1, 16 என இதுவரை பங்கேற்ற அத்தனை போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டான விராட் கோலி சதத்தை அடிக்க முடியாமலும் இந்தியாவுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார். கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவர் அதன்பின் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போடிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இருப்பினும் ஏற்கனவே 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதமடித்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ள காரணத்தால் இதுவரை பார்ம் என்பதை காரணம் காட்டி அவர் அணியிலிருந்து நீக்கப்படாமல் இருந்து வருகிறார்.

அனைவரும் கேள்வி:
ஆனால் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்ற பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் இப்படி சுமாராக செயல்பட்டு இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இளம் வீரர்களின் வாய்ப்பையும் கெடுப்பீர்கள் என்ற வகையில் கபில்தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் விராட் கோலி உலகதரம் வாய்ந்தவர் என்றாலும் ஃபார்முக்கு திரும்புவதற்கான வழியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

Kohli

அவரை போல தினம்தோறும் உலகம் முழுவதிலும் நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஒவ்வொரு மணி நேரமும் அவரை கேள்வி கேட்டு வருகிறார்கள். இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் உட்பட எத்தனையோ உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இந்த மோசமான தருணங்களை பார்த்துள்ளதாக தெரிவிக்கும் சிலர் விராட் கோலிக்கு ஆதரவையும் தெரிவிக்கின்றனர். அந்த வரிசையில் விராட் கோலியை மட்டுமே குறைகூறும் அனைவரும் சுமாராக செயல்படும் இதர இந்திய வீரர்களை இந்த அளவுக்கு மும்முரமாக ஏன் கேள்வி கேட்பதில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரசித் லத்தீப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

என்ன நியாயம்:
கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு என்ற நிலைமையில் விராட் கோலி சுமாராக செயல்பட்டு வரும் 2019 முதலான காலகட்டத்தில் நடந்த 2019, 2021 உலக கோப்பைகளில் இதர இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு இந்தியா உலக கோப்பையை வென்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

 

- Advertisement -

“நவீன காலத்தில் கிரிக்கெட் வித்தியாசமாக மாறியுள்ளது. பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான், விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட அனைவருக்கும் ஏதேனும் ஒரு பலவீனம் உள்ளது. அது தற்போதுள்ள டெக்னாலஜி காரணமாக ஏதோ ஒருநாளில் ஏதேனும் ஒரு தருணத்தில் வெளிப்படுகிறது. ஆனால் அது அவர்களின் ஆட்டத்தை மாற்ற முடியாது. தற்சமயத்தில் கேன் வில்லியம்சன் விராட் கோலியை போன்ற மோசமான சூழ்நிலையில் தவிக்கிறார். ஷார்ட் லென்த் பந்துகளில் கேன் வில்லியம்சன் தடுமாறுகிறார். எனவே இவர்கள் அடிப்படையான கிரிக்கெட்டுக்கு திரும்பி அவர்களது தரமான பயிற்சியாளர்களிடம் ஆலோசனை பெற்று பலவீனத்தில் முன்னேற்றமடைய முயற்சிக்க வேண்டும்”

“மேலும் நீங்கள் எப்போதும் விராட் கோலி என்ற ஒருவரை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மறுபுறம் மொத்த இந்திய அணியும் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் வெல்வது கிடையாது. அதைக் பார்க்காத நீங்கள் தொடர்ச்சியாக விராட் கோலியின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு இதர வீரர்களை கேள்வி கேட்காமல் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். 2019 உலகக்கோப்பை, 2021 டி20 உலகக் கோப்பைகளை பாருங்கள், அதில் விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் மற்ற அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

INDvsPAK

அவர் கூறுவது போல சமீப காலங்களில் விராட் கோலி தடுமாறுகிறார் என்றாலும் எஞ்சிய 10 பேர் அபாரமாக செயல்பட்டு இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை. இதில் 2019இல் அற்புதமாக செயல்பட்ட ரோகித் சர்மாவும் 2021 டி20 உலக கோப்பையில் சுமாராகவே செயல்பட்டார். ரோகித் சர்மாவை தவிர எஞ்சிய அனைவரும் இந்த காலகட்டத்தில் உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை என்பதும் உண்மையான ஒன்றாகும்.

Advertisement