பாகிஸ்தான் வீரர்களை பாராட்டும் பெரிய மனசு அந்த தமிழக வீரரிடம் இருக்கு – ரஷீத் லத்தீப் வெளிப்படை

latif
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியானது தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடந்த 12-ஆம் தேதி துவங்கி நேற்று வரை நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு அணிகளும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. ஏற்கனவே முதலாவது போட்டி டிராவில் முடிவடைந்த வேளையில் தற்போது 2-வது போட்டியும் டிராவில் முடிவடைந்துள்ளது.

pak vs aus

- Advertisement -

ஆனால் இந்த 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 556 ரன்களை குவிக்க பாகிஸ்தான் அணியை 148 ரன்களுக்கு சுருண்டது, பின்னர் ஆஸ்திரேலிய அணியானது 97 ரன்கள் எடுத்த நிலையில் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்த ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணிக்கு 505 என்ற மாபெரும் இலக்கினை நிர்ணயித்தது.

இதன்காரணமாக எப்படியும் பாகிஸ்தான் அணி தோற்று விடும் என கிரிக்கெட் வல்லுனர்கள் எண்ணினர். ஆனால் இவை அனைத்தையும் தகர்க்கும் விதமாக பாகிஸ்தான் அணியின் வீரர்கள் நான்காவது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தாலும் துவக்க வீரர் ஷபீக் உடன் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

babar azam

180 பந்துகளை சந்தித்து சதமடித்த அவர் இறுதியில் 425 பந்துகளை சந்தித்து 196 ரன்கள் குவித்தார். அதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வானும் சதம் அடித்திருந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 443 ரன்களை குவித்தது. இதன் காரணமாக ஐந்தாவது நாளில் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி போட்டியை டிரா செய்தது. இந்நிலையில் இந்த போட்டியை டிரா செய்ய முக்கிய காரணமாக இருந்த பாபர் அசாமை பல்வேறு பிரபலங்களும் வாழ்த்தி இருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் தமிழக வீரரான அஸ்வினும் தனது பங்கிற்கு ட்விட்டர் மூலம் பாபர் அசாமை பாராட்டியிருந்தார். இந்நிலையில் அஸ்வினின் இந்த பெருந்தன்மையான மனது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ரஷீத் லத்தீப் கூறுகையில் : அஷ்வின் எப்போதுமே மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறி பாராட்டும் தன்மை உடையவர். அவரிடம் மற்றவர்களை பாராட்டும் மனது நிறைய உள்ளது.

இதையும் படிங்க : என்னோட ஆதரவு அவருக்கு எப்போவும் உண்டு. கவலைப்பட வேண்டாம் – ஷிகர் தவான் பெருந்தன்மை

எதிரணி வீரர்களாக இருப்பினும் திறமை இருக்கும் வீரர்களை பாராட்டும் போது அவர் முன்னிலையில் இருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கை பேட்டி எடுப்பது, பாகிஸ்தான் வீரர்களை பாராட்டுவது என அவர் தனது பெரிய மனசை எப்போதும் வெளி காட்டி வருகிறார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement