இப்படி ஒரு டேலன்ட்டான வீரர் கிடைப்பதெல்லாம் ரொம்ப கஷ்டம் – இந்திய வீரரை பாராட்டிய ரஷீத் லத்தீப்

latif
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரினை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்காக அணியை பலமாக மேம்படுத்தி வரும் இந்திய அணியானது பல இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி தற்போது இந்திய அணியை பலமாக கட்டமைத்து வருகிறது.

Team India Jasprit Bumrah

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் மூன்றாவது டி20 போட்டியின் போது கடுமையான முயற்சி அளித்து தனி ஒருவராக 117 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார். அவரது இந்த போராட்டம் அனைவரும் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது மட்டுமின்றி பலரது பாராட்டுகளையும் பெற்றது.

அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரரா சூரியகுமார் யாதவை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லத்தீப்பும் தற்போது புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கிடைத்த தற்போதைய மிகச்சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ். அவரை போன்ற ஒரு டேலண்டான வீரர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிகவும் பலு சேர்த்துள்ளார்.

Suryakumar Yadav

அவரது ஆட்டத்தில் தனித்துவமான நிறைய ஷாட்கள் உள்ளது. எளிதாக சிக்ஸர் அடிக்கும் அவர் அனைத்து திசைகளிலும் மிக லாவகமாக விளையாடி வருகிறார். கடினமான திசைகளில் கூட அவரால் எளிதாக சிக்ஸர்களை விளாச முடிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இப்படிப்பட்ட திறமையான வீரர்கள் கிடைப்பது மிகவும் அரிது.

- Advertisement -

இதே போன்ற ஒரு திறமையை உடையவர் மேக்ஸ்வெல் அவருக்கு அடுத்து தற்போது இந்திய அணிக்காக இப்படி ஒரு வீரர் கிடைத்துள்ளார். அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் சமீபத்தில் வெளியான டி20 தரவரிசைக்கான பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs WI : 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – தமிழக வீரருக்கு இடம்

அதுமட்டுமின்றி இதுவரை இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 267 ரன்களையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 537 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement